தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கான பல் சிகிச்சை!

ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கான பல் சிகிச்சை!

ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கான பல் சிகிச்சை!


PUBLISHED ON : நவ 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனக்கு குளிரில் வெளியே சென்றால் பல் வலியும் கூச்சமும் வருகிறது. சாதாரணமாக குளிர் காலத்தில் பல வலி அதிகம் வருமா? இதனை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?

நமது பற்களுக்கு இயற்கையாகவே தட்ப வெப்ப நிலைகளை ஏற்றுக் கொள்ளும் திறன் உள்ளது. நமது பற்கள் 70 டிகிரி செல்சியஸ் கொண்ட சூடான காபியையும், 1.5 டிகிரி செல்சியஸ் கொண்ட குளிர்ந்த நீரையும் தாங்கும் சக்தி கொண்டவை. குளிர் காற்றில் நிற்கும் பொழுதோ குளிரில் வெளியே செல்லும் பொழுதோ, இந்த தட்ப வெப்பம் மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக மாறும். அப்பொழுது பற்களின் மேல் ஒரு வித அழுத்தம் ஏற்படும். நாளடைவில் இந்த அழுத்தம் பற்களுக்குள் கண்ணுக்கு தெரியாத அளவிலான விரிசல்களை உண்டாக்கும்.

இவையே வலி மற்றும் கூச்சம் வருவதற்கு காரணமாகும். இதனை தடுக்க அந்த விரிசங்களை அடைக்கும் விதமாக பற்களின் மேல் 'சீலன்டஸ்' எனப்படும் ஒரு வகை மருந்தினை பூச வேண்டும்.

பல் மருத்துவரின் ஆலோசனைப் படி சரியான இடைவெளியில் இதனை செய்தால் நல்ல பலன் இருக்கும். பல் கூச்சத்திற்கான பிரத்யேகமான பேஸ்ட்கள் உள்ளன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தினால் கூச்சம் குறையும். அதையும் கடந்து கூச்சம் ஏற்பட்டால் பற்களில் சொத்தையோ அல்லது பெரிய விரிசலோ உள்ளதா என சோதனை செய்து பின்னர் அதற்கு ஏற்றவாறு சிகிச்சை செய்யலாம்.

எனக்கு முன் பற்கள் சில ஆடுகின்றன. சில நேரங்களில் லேசான வலி உள்ளது. இந்தப் பற்களை எடுக்காமல் ஏதாவது சிகிச்சை செய்ய முடியுமா

பற்கள் ஆடுவதற்கு காரணம் அதனை சுற்றி உள்ள ஈறுகளும் எலும்பும் தேய்ந்து பற்களுக்கு பிடிமானம் இல்லாமல் போவது. பெரும்பான்மையாக ஈறு நோய்களாலும் சில நேரங்களில் கோணலான பல் வரிசையினாலும் இது போன்று தேய்மானம் ஏற்படும். அப்பொழுது இரண்டு வரை சிகிச்சை முறைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும்.

ஒன்று பற்களின் உட்புறத்தில் இருந்து அழுக்கு மற்றும் கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும். மற்றொன்று பற்களின் வெளிப்புறத்தில் 'ஸ்ப்லின்டிங்' எனப்படும் சிகிச்சை செய்ய வேண்டும். இம்முறையில் ஆடும் பற்களை அதற்கு இருபுறமும் உள்ள பற்களுடன் இணைத்து விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது பற்கள் நிலையாக இருக்கும்.

எனக்கு கடந்த சில ஆண்டுகளாக ரத்த கொதிப்பு உள்ளது. எனக்கு ஒரு பல் எடுக்க வேண்டும் என்றும் சில பற்களில் வேர் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் பல் மருத்துவர் கூறியுள்ளார். ரத்த கொதிப்பு மாத்திரை சாப்பிடுபவர்கள் பல் சிகிச்சை செய்து கொள்ளலாமா?

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் தாராளமாக பல் சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால் சில பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சிகிச்சை நாளன்று காலையில் வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகள் அனைத்தையும் சாப்பிட வேண்டும். காலை உணவு உட்கொள்ள வேண்டும். சிகிச்சைக்கு முன் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒரே நாளில் அனைத்து சிகிச்சையும் செய்யக் கூடாது.

ஏனெனில் நீண்ட நேரம் சிகிச்சை பெரும் பொழுது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே இரண்டு அல்லது மூன்று நாட்களாக பிரித்து சிகிச்சையை செய்து முடிக்க வேண்டும். அதே போல் பல் எடுத்ததும் அவ்விடத்தில் ரத்தக்கசிவு முற்றிலும் நின்றுவிட்டதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

- டாக்டர் ஜெ. கண்ணபெருமாள்,

பல் மருத்துவ நிபுணர், மதுரை.

94441 54551


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us