குண்டு மல்லி,கொஞ்சம் கேளு! - உடல் எடையைக் குறைக்கும் சுருள் பாசி!
குண்டு மல்லி,கொஞ்சம் கேளு! - உடல் எடையைக் குறைக்கும் சுருள் பாசி!
PUBLISHED ON : நவ 18, 2018

இந்திய சீதோஷண நிலையில், நன்றாக வளரக் கூடியது, 'ஸ்பைருலினா' எனப்படும் சுருள் பாசி. இந்தப் பாசியை, தேனியில் உள்ள பரமசிவன் கோவில் அடிவாரத்தில் இருக்கும் எங்கள் பண்ணையில், இயற்கை முறையில் வளர்க்கிறோம். இதைப் பக்குவப்படுத்தி, பவுடராகவும், மாத்திரைகளாகவும் விற்பனை செய்கிறோம்.
ஆப்ரிக்காவில், 'சாட்' ஏரியில், இயற்கையில் விளையும் சுருள் பாசியை, உணவாக பயன்படுத்தும் மக்கள், மற்றவர்களைக் காட்டிலும், ஊட்டச்சத்து மிக்கவர்களாக இருக்கின்றனர். சுருள் பாசியில், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, இயற்கையிலேயே இருக்கிறது. இது அறிவியல் பூர்வ ஆய்வில், உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மத்திய உணவு பாதுகாப்பு கழகத்திடம் இருந்து, உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அங்கீகாரம் எங்களுக்கு கிடைத்துள்ளது.
அதிக உடல் எடை உள்ளவர்கள், சுருள் பாசியை தொடர்ந்து சாப்பிட்டால், தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் எடை சீராகக் குறைந்து விடும். பழச்சாறு, மோர் என, குளிர்ந்த பானங்களில், ஒரு டம்ளருக்கு ஒரு ஸ்பூன், என்ற அளவில் கலந்து குடிக்கலாம். தோசையின் மேல் பவுடரைத் துாவி, பொடி தோசையாக சாப்பிடலாம். எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டாலும், சுவை மிக அருமையாக இருக்கும்.
எல்லா வயதினரும் இதைச் சாப்பிடலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தயாராகும், உயர்ரக சுருள் பாசி, உணவு பயன்பாட்டிற்காக, நாசாவிற்கு அனுப்பப்படுகிறது.
பி.சிவகணேஷ்,
சுருள் பாசி உற்பத்தியாளர், தேனி.
sivaganesh@sreebioform.com
