PUBLISHED ON : மார் 06, 2022

உடல் எடை குறைய முதல் படி, உடம்பில் உள்ள நச்சுத் தன்மை முழுதும் வெளியேறுவது தான். சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், சோப்பு, கிரீம், பற்பசை, அழகு சாதனப் பொருட்கள் என்று அனைத்திலும், பெட்ரோலியப் பொருட்கள், உலோகங்கள் கலந்து உள்ளன.
நச்சு, நம் உடம்பின் அமிலத் தன்மையை அதிகரிக்கக் கூடியது. மாசு கலந்த சுற்றுச்சூழல், புற்றுநோய், 'ஆட்டிசம்' என்று பிறவி உடல் கோளாறுகள், மரபியல் நோய்களை உண்டாக்கக் கூடியது.
உடம்பில் உள்ள நச்சு முழுதும் வெளியேறாவிட்டால், கொழுப்பை குறைப்பது சிரமம். காலையில் வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், கல்லீரலில் உள்ள நச்சுத் தன்மை நீங்கும்.
எலுமிச்சை கலந்த நீரை குடிக்கும் போது, முதல் சில நாட்கள், வாந்தி வரும் உணர்வு, லேசான மயக்கம், தலை சுற்றல் போன்றவை வரலாம். உடம்பில் தங்கிய நச்சு சிறிது சிறிதாக வெளியேறினால், இது சரியாகி விடும்.
-ஹேமா ரத்தினம்,
ஹோலிஸ்டிக் நியூட்ரிஷனிஸ்ட், டோரன்டோ, கனடா
