தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உங்கள் சிறுநீரை எறும்பு மொய்த்தால் டயாபடீஸ்!

உங்கள் சிறுநீரை எறும்பு மொய்த்தால் டயாபடீஸ்!

உங்கள் சிறுநீரை எறும்பு மொய்த்தால் டயாபடீஸ்!


PUBLISHED ON : ஜூன் 28, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று ஒரு வீட்டில் சுவர் இருக்கிறதோ இல்லையோ, வீட்டில் வசிப்பவர்களில் ஒருவருக்காவது சுகர் இருக்கிறது. அந்தளவுக்கு இன்று சர்க்கரை நோய் தாக்காத குடும்பங்கள் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் உடனே அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதே போன்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தாலும், பல பிரச்னைகளை சந்திக்கக்கூடும்.

இப்படி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால், அதை ஹைப்பர் கிளைசீமியா என்றும், அதுவே குறைவாக இருந்தால், அதை ஹைப்போ கிளைசீமியா என்றும் சொல்வார்கள். பொதுவாக உடலில் ஓடும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்க ஆரம்பித்தால், அது ஒருசில அறிகுறிகள் வாயிலாக வெளிப்படும்.

தாகம் அதிகம்: ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளில் ஒன்றுதான் தாகம். உங்கள் வாய் எப்போதும் வறட்சியுடன் இருப்பது போல், தாகம் அதிகம் எடுத்தால், உடனே கவனியுங்கள்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது: தண்ணீர் அதிகம் குடிக்காமல், அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று உணர்ந்தால், அதுவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளதன் அர்த்தம்தான்.

சோர்வு, தலைவலி: ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, சோர்வு, தலைவலி, மங்கலான பார்வை மற்றும் தலை பாரத்துடன் இருப்பது போன்று இருக்கும்.

பசி அதிகரிக்கும்: உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் நேரம், எப்போதுமே பசியுடன் இருப்பது போன்று உணரக்கூடும்.

உடல் வறட்சி: போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், உடலானது வறட்சியடைய ஆரம்பிக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளின் உடலில் வறட்சி ஏற்பட ஆரம்பித்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

எடை குறைவு: திடீரென்று உடல் எடை குறைவது, பல்வேறு பிரச்னைகளுக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதும் ஒன்று.

சிறுநீரில் குளூக்கோஸ்: ரத்தத்தில் சரியான அளவில் சர்க்கரை இருந்தால், சிறுநீரில் வெளியேறும் குளூக்கோசை சிறுநீரகமானது உறிஞ்சிக் கொள்ளும். ஆனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால், குளூக்கோசானது சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும். அப்படி டாய்லெட்டில் சிறுநீரை வெளியேற்றிய பின், டாய்லெட்டில் சிறு கறுப்பு எறும்புகள் மொய்க்க ஆரம்பித்தால், சிறுநீரில் குளுக்கோஸ் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us