தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரின் டைரிகுறிப்பு

டாக்டரின் டைரிகுறிப்பு

டாக்டரின் டைரிகுறிப்பு


PUBLISHED ON : டிச 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவ., 23, 2016: அனிதாவின் அப்பா போக்குவரத்து துறையில் பணியில் இருந்தார். அம்மா இல்லத்தரசி. வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள், புறநகரில் இடம் வாங்கி வீடு கட்டி சென்றனர். புது வீட்டில் குடியேறிய பின் காய்ச்சல், நோய் தொற்று என்று வீட்டில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து உடல் நல பாதிப்பு. காரணம், வீட்டிற்கு பக்கத்தில் இருந்த நீர் தேங்கிய குட்டையிலிருந்து ஏராளமான கொசுக்கள். ஜன்னலையோ கதவையோ திறந்தால் போதும், அவை மொத்தமும் வீட்டிற்குள்தான் படையெடுக்கும். அதனால் கொசுவர்த்திகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பாதிப்பு அனிதாவிற்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது.மலேரியா, 'டெங்கு' போன்ற நோய்கள் வர, கொசுக்கள் காரணமாக உள்ளன. கொசுக்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும், கொசுவர்த்திச் சுருள், திரவ நிலையில் உள்ள கொசு விரட்டி போன்றவை எல்லாம் வேதிப் பொருட்களால் ஆனவை. அவை, கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை; நம் நுரையீரலையும் பாதிக்கிறது. கொசுவர்த்தி சுருள் அலெத்ரின், ஈஸ்பயோத்ரின் போன்ற செயற்கையான வேதிப்பொருட்களால் செய்யப்

படுகிறது. இதை மணிக்கணக்காக பூட்டிய அறைக்குள் எரியவிடும் போது தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், மூக்கிலும் கண்களிலும் நீர் ஒழுகுதல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். தொண்டையில் வலி, அலர்ஜி, எரிச்சல், நோய்த்தொற்று ஏற்படும். வறட்டு இருமல் அதிகமாக வரும். 'சைனசைடிஸ்' (sinusitis) ஏற்பட்டு மூக்கு அடைத்துக்கொள்ளும். சில நேரம் மூக்கின் உள்ளே தொற்றுக் கிருமிகள் அதிகமாகி, சீழ் கூட பிடிக்கலாம். இது போன்ற ஆரம்ப அறிகுறிகளின் போதே கவனிப்பது நல்லது.கொசுவர்த்தி புகை நுரையீரலை அழற்சி அடையச் செய்து, ஆஸ்துமா நோயை

ஏற்படுத்துகிறது. சிகரெட்டினால் ஏற்படும் பாதிப்பைப் போன்றது தான் இதுவும். 'ஏசி' அறையில் கொசுவர்த்தியை கொளுத்தும்போது, புகை வெளியே செல்லாமல் உள்ளேயே சுற்றும். தொடர்ந்து இதை சுவாசித்தால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் கேன்சராக கூட மாறலாம். கொசுக்கடியை தவிர்க்க தடவும் சில கிரீம்கள் கூட, சிலருக்கு தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். கொசுக்களிடம் இருந்து தப்பிக்க, கொசு வலைகள் பயன்படுத்துவது பாதுகாப்பானது. இதைவிட சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது இன்னும் நல்லது.உண்மை நிலையை கூறியவுடன் அனிதாவின் அப்பா கொசுவர்த்திகளை தவிர்த்துவிட்டு, கொசுவலைகளை ஜன்னல்களில் அடித்து விட்டார்.

தாமோதரன்,

நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர்.

மீஞ்சூர், திருவள்ளூர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us