தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உறவு மேலாண்மை: எனக்கு மட்டும் இரண்டு காதல்

உறவு மேலாண்மை: எனக்கு மட்டும் இரண்டு காதல்

உறவு மேலாண்மை: எனக்கு மட்டும் இரண்டு காதல்


PUBLISHED ON : டிச 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். மாதம் ஒருமுறை, அங்கு பணி செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவான மனநல ஆலோசனை வழங்குவதற்காக செல்கிறேன். சில ஊழியர்கள், தனியாக வந்து அவர்களின் பிரச்னைகளுக்கு ஆலோசனை கேட்பதுண்டு. அங்கு வேலை செய்யும், 24 வயது இளைஞன், நான் எப்போது சென்றாலும், அக்கா, அக்கா என்று என் மீது அன்பாக, மரியாதையாக இருப்பான். தன்னுடைய பல அனுபவங்களை, சந்தேகங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வான். கடந்த முறை நான் சென்றபோது, வழக்கமான உற்சாகம் அவனிடம் இல்லை. ஏதோ பறிகொடுத்தவன் போலவே இருந்தான். இவனுக்கு என்ன ஆயிற்று என்று யோசித்த நேரத்தில், சக நண்பனிடம், 'டேய், எல்லாருக்கும் ஒரு லவ்வர் என்றால் எனக்கு மட்டும் ரெண்டு' என்று சிரித்துக் கொண்டே சொல்வதைக் கேட்டேன்; அவனைத் தனியாக அழைத்துப் பேசினேன்.முதலில் தயங்கியவன், அதன்பின், மெதுவாக, அக்கா, என் உயரதிகாரி ஒருவர், அடிக்கடி என்னை அவருடைய அறைக்கு அழைத்து தவறாக நடக்க முயற்சி செய்கிறார். ஆரம்பத்தில், உன் உயரம், உடல்வாகு

நன்றாக இருக்கிறது என்ற ரீதியில் பேசினார். நான் தவறாக நினைக்கவில்லை. போகப் போக அவர் என் மீது காட்டும் அக்கறையும் தவறான நடத்தையும் எனக்கு ஒருவித பயத்தைத் தருகிறது. அவருக்கு மனைவி, குழந்தைகள் எல்லாம் இருக்கின்றனர். அப்படி இருந்தும் இப்படி நடந்து கொள்வார்களா என்று அதிர்ச்சியாக உள்ளது. எப்படி தவிர்ப்பது என்றே தெரியவில்லை, என்றான் அழாத குறையாக.ஒரே பாலினத்தைச் சேர்ந்த இன்னொருவரிடம் நட்பைத் தாண்டி வேறு கோணத்தில் ஆர்வம் வருவது என்பது நமக்கு இயற்கைக்கு மாறுபட்டதாகத் தோன்றுகிறது. வயதிற்கு வந்த பையன் ஒரு பெண்ணின் மேல் ஆசைப்படுவது இயற்கை. ஆனால், ஒரு ஆண் நட்பைத் தாண்டி இன்னொரு ஆணை விரும்புவது, பெண் இன்னொரு பெண்ணை விரும்புவது சமுதாய ஒழுக்கத்திற்காக நம் இயற்கைக்கு முரணானது என்று சொன்னாலும் அறிவியல் பூர்வமாக உடற்கூறியல் அடிப்படையில் தவறேதும் இல்லை. ஈஸ்ட்ரோஜென், ஆன்ட்ரோஜென் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மையால் ஏற்படுவது இந்த மனநிலை.

விருப்பமில்லாத ஒரே பாலினத்தைச் சேர்ந்தவரை விருப்பத்திற்கு இணங்க வேண்டும் என்று வற்புறுத்துவது தான் தவறு. தன்னுடைய மேலதிகாரி என்பதால், இந்தப் பையனால் தனக்கு விருப்பமில்லை என்பதை கூற தைரியம் இல்லை. நீ முதலில் இது போன்ற உறவில் உனக்கு விருப்பம் இல்லை என்று அவருக்குப் புரியவை. அவர் தொடர்ந்து வற்புறுத்தும் பட்சத்தில், நீ வேறு இடத்திற்கு போய்விடு. இதுவரை நடந்ததை மறந்து, ஒரு

புது வாழ்க்கையை ஆரம்பி. நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டும் என்பது இல்லை, என்றேன். இதேபோல, இன்னொரு பையன்

ஆலோசனைக்காக என்னிடம் வந்தான். அவனுக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது. ஆனால், அவன் வயதையொத்த இன்னொரு பையனிடம் தான் அவனுக்கு விருப்பம். விருப்பம் என்றால் அது உடல் ரீதியானது இல்லை; வேறு மாதிரியானது. அதாவது, அந்தப் பையனை தன் குழந்தை போல பாவித்து எல்லாம் செய்வான். சாப்பாடு ஊட்டுவது, கதை சொல்வது என்று. அவனும் இவனை, 'டாடி' என்று தான் அழைப்பான். இந்த இரண்டாவது விஷயத்தில், ஒருவர் மீது மற்றவருக்கு விருப்பம் இருந்தது. அதுதான் வித்தியாசம்.

செல்லம் நரேந்திரன்

மனநல ஆலோசகர்

98433 14949

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us