தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்


PUBLISHED ON : டிச 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீரிழிவு நோயாளிகள் உலகில் எத்தனை சதவீதத்தினர்?

சர்வதேச அளவில், 20 கோடி, இந்தியாவில், ஏழரை கோடி, தமிழகத்தில், 90 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. 2030ல் உலக அளவில், இந்தியா முதலிடத்தில் இருக்கும் என உலக சுகாதார மையம் கூறுகிறது.



இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

தனிநபருக்கு மன அழுத்தம், தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயம், பொருளாதார சிக்கல் ஏற்படும். ஒட்டு மொத்தமாக தேசத்தின் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.



முழுமையாக இதை குணப்படுத்த முடியுமா?

நீரிழிவு வராமல் கவனமாக இருந்து தவிர்த்துக்கொள்ள முடியும். ஆனால், வந்துவிட்ட பின் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முழுமையாகக் குணப்படுத்த முடியாது. இதை நோய் என்பதை விட, மனித உடலில் உண்டாகும் ஒரு குறைபாடு எனலாம்.



டயாபடிக் மெலிட்டஸ் என பெயர் வரக் காரணம்?

டயாபடிஸ், என்பதற்கு கிரேக்க மொழியில் நீரூற்று என்று பொருள். அதிகப்படியான நீர், சிறுநீரகக் கழிவதால் இப்பெயர். மெலிட்டஸ் என்பதற்குத் தேன் போன்ற தித்திப்பு என்று அர்த்தம். ரத்தத்திலும் சிறுநீரிலும் இனிப்பு அதிகரிப்பதை குறிப்பதால் இந்த பெயர்.



இப்பாதிப்பு எப்படி வருகிறது?

உணவை எரித்து, சக்தியாக மாற்றுவதற்காக கணையம் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன், குறைவாகச் சுரந்தாலோ அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, வருவது தான் நீரிழிவு.



நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்?

அதிகமாகச் சிறுநீர் கழிப்பது, அதிகத் தாகம், அதிகப் பசி, உடல் சோர்வு, உடல் எடை குறைதல் போன்றவை பொதுவான அறிகுறிகள்.



யாருக்கெல்லாம் வரும்?

பெற்றோருக்கு இருந்தால், வாரிசுகளுக்கு வரலாம். இதுதவிர, வாழ்க்கை முறை மாற்றம், உடல் உழைப்பு போதிய அளவு இல்லாதது,

துரித உணவு, சுற்றுச் சூழல் போன்ற காரணங்களாலும் வரலாம்.



இதில் வகைகள் உள்ளதா?

டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்ப கால நீரிழிவு

(Gestational diabetes).



தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?

  1. மாவுச் சத்து, கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்கலாம். உடலின் சர்க்கரை அளவு, தன்மையைப் பொறுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி,
  2. 'டயட் சாட்' தயாரித்து பின்பற்றுவது நல்லது.


எவ்வாறு கண்டறிவது, சிகிச்சைகள் என்ன?

  1. சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அதற்கான பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.சர்க்கரை அளவை, தொடர்ந்து கண்காணிக்க பல எளிமையான நவீன கருவிகள் வந்துவிட்டது. அவற்றை பயன்படுத்தலாம்.


ரங்கபாஷ்யம்


பொது மற்றும் நீரிழிவு நிபுணர்.

கடயநல்லுார்,

திருநெல்வேலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us