தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சர்க்கரை நோயாளிகளுக்கு விந்தை செய்யும் வெந்தயம்

சர்க்கரை நோயாளிகளுக்கு விந்தை செய்யும் வெந்தயம்

சர்க்கரை நோயாளிகளுக்கு விந்தை செய்யும் வெந்தயம்


PUBLISHED ON : மார் 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆதிகாலம் முதல் இன்று வரை, அடுப்படியில் இருக்கும் அஞ்சறைப்பெட்டி, குடும்பத்தின் மருந்து பெட்டியாக பயன்பட்டு வருகிறது. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து மசாலா பொருட்களும், ஏதோ ஒரு நோயை போக்கும் மருந்தாகவும், நோய் எதிர்ப்புள்ள பொருளாகவும் பயன்படுகிறது. இதில் வெந்தயம் சர்க்கரை நோய்க்கு மிக அற்புதமான மருந்தாக பயன்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவுகிறது வெந்தயம். நீரிழிவு, ரத்த கொதிப்பு, மாரடைப்பு ஆகிய மூன்று நோய்க்கும், ஒரு பொது மருந்தாக வெந்தயம் விளங்குகிறது.

வெந்தயக் கீரை, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் கெட்ட கொழுப்பு குறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

கரையும் நார்ப் பொருள்தான், இதயத்தில் கொழுப்பு படியாத தன்மையை ஏற்படுத்தும். கரையாத நார்பொருளே மலச்சிக்கலை நீக்குவதுடன், ரத்தத்தில் உள்ள, சர்க்கரை அளவையும் கட்டுபாட்டில் வைத்திருக்கும். வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமான பொட்டாசியம் சத்து, ரத்தத்தில் சேரும் உப்பு சத்தை மாற்றி, ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

சைவ உணவுகளில் நார்ச்சத்துள்ள பொருளாக, நாம் பதார்த்தங்களிலும், அனைத்து உணவிலும் வெந்தயம் சேர்த்து வருகிறோம். வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக உபயோகித்தால், கசப்பு தன்மை அதிகரிக்கும். வெந்தயத்தை மோரில் ஊற வைத்து அரைத்து, தலைக்கு தேய்த்துக் குளித்தால், முடி பளபளப்பாக இருப்பதுடன் கண்ணுக்கும் குளிர்ச்சியாக இருக்கும்.

இதனால், பொடுகு தொல்லை விரைவிலே குணமாகும். முடியின் நிறம் மேலும் கருமையாகும். 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து, சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து, மோரில் கலந்து கொடுத்தால் பேதி, சீதபேதி குணமாகும்.

அரிசியுடன் சிறிது வெந்தயம் சேர்த்து, பூண்டை தட்டி போட்டு கஞ்சி வைத்து குடித்தால், எளிதில் ஜீரணமாகும். இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும். வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது.

அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

வெயில் காலங்களில் உடல் சூடு அதிகரிக்கும். குறிப்பாக, கல்யாணம் ஆகாத இளம் பெண்கள், வெந்தய குளியல் எடுப்பது நல்லது. அதிகாலை

நேரத்தில் எழுந்து, இரவில் தண்ணீரில் ஊற வைத்த வெந்தையத்தை மை போல் அரைத்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், உடல் வெப்பம் தணியும்.

கண்கள் குளிச்சி அடையும். முகத்தில் உள்ள பருக்கள் மறையும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள், குளித்து வந்தால் சிறப்பான பலன்களை தரும்.

வெந்தயக்கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்ட இந்த கீரைகளை, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.

பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சிறுநீர் கட்டை குறைத்து, நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. இந்த கீரையை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் பெருகும்; குடல் புண்களை குறைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us