sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/தீபாவளி வந்தாச்சு டோய்

தீபாவளி வந்தாச்சு டோய்

தீபாவளி வந்தாச்சு டோய்


PUBLISHED ON : செப் 26, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2014


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தீபாவளிக்கு பலகாரம் சுடுவது குறித்து இப்போதே, 'டிஸ்கஷன்' ஆரம்பித்திருப்பீங்களே...! இதோ உங்களுக்காக டிப்ஸ்:

* வெண்ணெயை காய்ச்சி இறக்குகையில், அரை ஸ்பூன் வெந்தயத்தைப் போட்டால், நெய் நல்ல மணமாயிருக்கும்.

* நெய் வைத்திருக்கும் ஜாடியில், ஒரு துண்டு வெல்லத்தை போட்டு வைத்திருந்தால், நெய் மணம் மாறாமல் இருக்கும்.

* பக்கோடா மொர மொரப்பாக இருக்க, மாவைக் கலக்கும் போது, சிறிதளவு நெய்யும், உப்பிட்ட தயிரும் கலந்து கொண்டால் போதும்.

* உளுந்த வடைக்கு, மாவை நைசாக அரைத்து, வேக வைத்த உருளை கிழங்கையும் சேர்த்து, பிசைந்து வடை தட்டினால், புஷ்... புஷ்... என்று, வடை வெகு ஜோராக இருக்கும்.

* ரவா லட்டு செய்யும் போது, கையில் நெய்யைத் தடவிக் கொண்டு உருண்டை பிடியுங்கள். உருண்டையும் சுலபமாக இருக்கும். வாசனையாகவும் இருக்கும்.

* அதிரசம், கடிப்பதற்கு மிருதுவாக இல்லாமல், கரடு முரடாக இருக்கிறதா? இட்லிக் குக்கரில் வைத்து, அவிய விட்டு எடுங்கள்.

* வேர்க்கடலை உருண்டை செய்யும் போது, வெல்லப் பாகுடன், சிறிது சீனி சேர்த்து செய்தால், கரகரப்புடன் இருக்கும்.

* முறுக்கு, காராபூந்தி, பிஸ்கட் வைக்கும் டின்களில், சிறிதளவு உப்பை, ஒரு துணியில் முடிந்து போட்டு வைக்கவும். நமத்துப் போகாமல், மொறு மொறுவென்று இருக்கும்.

* தேன் குழல் செய்ய, மாவு அரைக்கும் போது, உருளைக்

கிழங்கை வேகவைத்து, அதனுடன் சேர்த்து அரைத்தால், தேன் குழல், மிக மிக சுவையாக இருக்கும்.

* அதிரசம் செய்யும் போது, சிறிது பேரிச்சம் பழம் கலந்து மாவைப் பிசையுங்கள். சுவை ஜோராக இருக்கும்.

* தேன் குழல், சீடை ஆகியவற்றுக்கான மாவுடன், வெந்நீர் ஊற்றிப் பிசைந்தால், எத்தனை நாட்களானாலும், நமத்துப் போகாது.

* மைசூர் பாகு செய்யும் போது, ஒரு பங்கு கடலைமாவுடன், இரண்டு பங்கு பயத்த மாவு கலந்து செய்யுங்கள். வாயில் போட்டவுடன் கரைந்து விடும்.

* தேங்காய் பர்பி தயாரிக்கும் போது, தேங்காய் துருவலில் சிறிது பால் சேர்த்து, மிக்சியில் சிறிது நேரம் ஓடவிட்டு செய்யும்போது, பர்பிக்கு அதிக வெள்ளை நிறம் கிடைக்கும். இறக்கும் போது, சிறிது கடலை மாவைத் துாவி, கிளறி

இறக்கினால் சுவை அதிகமாகும்.

* 'இன்ஸ்டன்ட்' மாவு மூலம் குலோப் ஜாமூன் செய்யும் போது, மாவைக் கலக்கும் போது, சிறிது வெண்ணெய் சேர்த்தால், மிருதுவாக இருக்கும்.

* பொரித்தெடுத்த ஜாமூன்களை சூடாக சர்க்கரைப் பாகில் சேர்க்காமல், நன்கு ஆறிய பின் சேர்க்கவும். ஜாமூன்கள்

விரியாமல், கரையாமல் சுவையாக இருக்கும்.

* டப்பாவில் கொஞ்சம் பச்சைக் கற்பூரத்தை, பேப்பரில் மடித்து வைத்து, மேலே லட்டுகளை வைத்தால், நல்ல வாசனையாக இருக்கும்.

* எண்ணெய் பலகாரம் செய்யும் போது, எண்ணெய்

பொங்கி வழிந்தால், கறிவேப்பிலையையோ, சிறிது

புளியையோ போட்டு எடுத்து விட்டுப் பயன்படுத்தினால், எண்ணெய் பொங்குவதையும், காறல் வாசனையையும் தவிர்க்கலாம்.

* சமையலறை மேடையில், எண்ணெய் கொட்டிப் பிசுக்காக இருந்தால், கடலை மாவைக் கெட்டியாக, தண்ணீரில் கரைத்துப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்துத் தேய்த்து கழுவ மேடை பளிச்சென்று இருக்கும்.

* அரைத்த மாவு சற்று சூடாக இருக்கும் பட்சத்தில், காகிதத்தில் கொட்டிப் பரப்பி, சூடு நன்றாக ஆறிய பிறகே டப்பாவில் நிரப்பி வைக்கணும்.

* ஏலக்காய் பொடித்து போட்ட பிறகு, அதன் தோலை குடிக்கும் நீரில் போட்டு விட்டால், மணமும், ருசியும்

சேர்ந்து சுவையாக இருக்கும்.

-வான்மதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us