தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/'அவசியமின்றி வெளியில் போக வேண்டாம்!'

'அவசியமின்றி வெளியில் போக வேண்டாம்!'

'அவசியமின்றி வெளியில் போக வேண்டாம்!'


PUBLISHED ON : மார் 10, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 10, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடை வெயிலை சமாளிக்க, டாக்டரின் 'டிப்ஸ்'

''வெயில் கொளுத்தி வருவதால், சூரிய வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்க்க, குளிர்ந்த ஆகாரங்கள் உட்கொள்ள வேண்டும்; பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்,'' என, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 'டீன்' வள்ளி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:

காலை முதல், மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்வோர், குடையை பயன்படுத்தலாம். பாலியஸ்டர், கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து, பருத்தி மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிந்தால், வெயிலில் தாக்கம் உடலை அதிகமாக பாதிக்காது.

தண்ணீர் வசதி இருந்தால், காலை மற்றும் மாலை, இரவு வேளைகளில் குளிப்பது, உடல் ஆரோக்கியத்தை தரும். வெப்ப காலத்தில், வெப்ப பக்கவாதம் என்ற பாதிப்பு வர வாய்ப்புள்ளதால், வயதானவர்கள், குழந்தைகளை வெயிலில் அதிக நேரம் இருக்க வைக்க கூடாது. அவர்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது.

வீட்டுக்குள் நல்ல காற்றோட்டம் வரும்படி, ஜன்னல்கள், கதவுகளை திறந்து வைக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்; முந்தைய இரவில் தண்ணீர் ஊற்றிய பழைய சாதம், காலையில், நீராகாரமாக எடுத்து கொள்ளலாம்.

எலுமிச்சை சாறு, பழச்சாறு, மோர், இளநீர் மற்றும் நீர்சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவது, உடல் வெப்பத்தை தணிக்கும். வெயிலால், உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதால், உப்பு குறைய வாய்ப்புள்ளது.

எனவே, எலுமிச்சை, மோர் போன்றவற்றில் உப்பு சேர்த்து கொள்ளலாம். மண்பானையில் வைக்கப்படும் குளிர்ச்சியான உணவு பொருட்களை உட்கொண்டால், உடல் வெப்பம் வெகுவாக குறையும்.

வெயில் காலம் முடியும் வரை, டீ மற்றும் காபி போன்ற சூடான பானங்களை தவிர்த்து, குளிர் பானங்களை அருந்தலாம். எதையும் சூடாக சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது. முடிந்தவரை காரம், மசாலா சார்ந்த உணவு வகைகளை தவிர்ப்பது நன்மை தரும்.

இவ்வாறு, 'டீன்' வள்ளி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us