தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அதிக கலோரி; குறைந்த விலை!

அதிக கலோரி; குறைந்த விலை!

அதிக கலோரி; குறைந்த விலை!


PUBLISHED ON : மார் 07, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் பருமன் உள்ள குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள்... இந்த இரு தரப்பினருக்கும் வயது, உயரத்திற்கு ஏற்ப, உடல் எடையுடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்.

பொருளாதார வசதி உள்ள குழந்தைகள், அதிக உடல் எடையுடன் இருப்பர் என்று நினைப்பது தவறு.

நடுத்தர, வறுமைக் கோட்டில் உள்ள குழந்தைகளும், உடல் பருமனோடு இருக்கின்றனர். காரணம், 'பெப்சி, கோக், கேக், பிஸ்கட், லேஸ், குர்குரே' போன்ற, அதிக கலோரி உள்ளவை, மிகக் குறைந்த விலையில், பெட்டிக் கடைகளிலும் கிடைப்பது தான்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன், ஒல்லியாக, ஊட்டச்சத்து குறைபாடுடன் குழந்தைகளை அழைத்து வருவது, இயல்பான ஒன்று.தற்போது, அப்படியே மாறி, 'அதிக உடல் எடையை எப்படி கட்டுப்படுத்துவது?' என்று கேட்கின்றனர்.ஒரே நாளில் பிரச்னையை தீர்த்து விட முடியாது. தொடர்ந்து எடுக்கும் முயற்சிகளால் மட்டுமே, குழந்தை ஆரோக்கியமாக மாற முடியும்.

அதிலும், 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டுமே நடக்கும் தற்போதைய நிலையில், பிரச்னை மேலும் தீவிரமாகி உள்ளது.சரியான உடல் எடையுடன் தான் இருக்கிறோமா, தினசரி சாப்பிடும் உணவு முறை சரியானது தானா. எந்த உணவில் என்ன சத்துக்கள் உள்ளன, என்று அறிந்து கொள்ள, நவீன ஆலோசனை மையம் துவக்கி உள்ளோம்.

உடல் எடையை குறைக்க, உடனே அறுவை சிகிச்சை செய்வது கூடாது. எடைகூடியதற்கான காரணம் என்ன என்று தெரிந்து, அதை தவிர்க்க வேண்டும். அடுத்து, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று, தினசரி வாழ்க்கையில் ஒழுங்கு முறையை பின்பற்றி, இதில் எல்லாம் பலன் இல்லை என்றால் மட்டுமே, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

உடல் பருமன், ஊட்டச்சத்து, உணவு முறை குறித்து, இந்த மாத இறுதி வரை இலவசமாக ஆலோசனை பெறலாம்.

டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர்,

தலைவர், 'மெட் இந்தியா' மருத்துவமனை,

சென்னை.

044 - 28312345, 99405 18909

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us