sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

உயிர்மேல் ஆசை இருக்கா? உருக்குலையாம காப்பாற்றுங்க இதயத்தை!

/

உயிர்மேல் ஆசை இருக்கா? உருக்குலையாம காப்பாற்றுங்க இதயத்தை!

உயிர்மேல் ஆசை இருக்கா? உருக்குலையாம காப்பாற்றுங்க இதயத்தை!

உயிர்மேல் ஆசை இருக்கா? உருக்குலையாம காப்பாற்றுங்க இதயத்தை!


PUBLISHED ON : ஆக 03, 2014

Google News

PUBLISHED ON : ஆக 03, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக சுகாதார அமைப்பு - WHO, 2008ல், வெளியிட்ட தகவல்படி, உலக அளவில் இதய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு ஆண்டுக்கு, 1.73 கோடி பேர். இதில், தென் கிழக்கு ஆசியாவில் மட்டும், 37 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

கடந்த, 2013ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில், இதய நோயாளிகள் எண்ணிக்கை, 24 சதவீதம். அடுத்த சில ஆண்டுகளில், இது, 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என, நம்பப்படுகிறது. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் இந்த எண்ணிக்கை அதிகம்.

மாரடைப்புக்கு காரணம்: இதய இயலை (Cardiology) பற்றிய விஞ்ஞானத்தை, அதிகாரப்பூர்வமாக விவரிப்பது அல்ல, இக்கட்டுரையின் முக்கிய குறிக்கோள். இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்க, நாம் தினமும் கையாள வேண்டிய நடைமுறைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே, நோக்கமாகும்.

இதய வலியும், மாரடைப்பும் இதயத் தமனி நோய்களாகும். இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்லும் இதயத் தமனிகளில், கொழுப்பு படிந்து ரத்தம் தடைபடுவதால் அல்லது தமனிக் குழாய்கள் தடித்து, உள்வட்டம் குறுகிவிடுவதால், இதயத்துக்கு தேவையான ரத்தமும், பிராண வாயுவும் கிடைப்பது குறைகிறது.

அதனால், இதயவலி (ஆஞ்சினா பெக்டோரிஸ் - angina pectoris) ஏற்படுகிறது. இதை இதயத்திசு ரத்த ஓட்டக்குறைவு என்றும் கூறுகின்றனர்.

இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது, ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதய திசுக்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய் அழிந்து விடுகின்றன. அதனால், மாரடைப்பு ஏற்படுகிறது.

இரண்டாவது பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பிரிவுகள் நம்முடன் பிறந்தவை. இந்த மூன்று வகைகளினால், இதய தமனி நோய்கள் வருவதற்கான சந்தர்ப்பமும் அதிகம் உள்ளது. ஆனாலும், இவை, மூன்றும் மாற்றப்பட முடியாதவை. வயதான ஒரு ஆணுக்கு, அவரின் தந்தை அல்லது சகோதரர்களுக்கு, 55 வயதுக்கு முன் அல்லது சகோதரிகளுக்கு, 65 வயதுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், அந்த ஆணுக்கு இதய தமனி நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில், முதல் பிரிவில் குறிப்பிட்டுள்ள ஏழு காரணங்களை மாற்றக்கூடிய வாய்ப்பு நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. உதாரணத்திற்கு, புகை பிடிக்காதவர்களை விட, புகை பிடிப்பவர்களுக்கு, இதயத் தமனி ரத்தக்குழாய் நோய்கள் ஏற்பட, 10 மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

தினமும் உடற்பயிற்சிகள், உணவு வகைகளைக் கட்டுப்படுத்துதல், வாழ்க்கை முறை மாற்றங்கள், இவைகள் மூன்றுமே, மொத்தமாக அதிக பலனை தர நிறைய வாய்ப்புள்ளது. இவைகள் மூன்றுடன் தொடர்பு கொண்டுள்ள பயனாக ரத்தக் கொழுப்பையும், ரத்த அழுத்தத்தையும் குறைப்பதற்கு வாய்ப்புள்ளது. இதற்கு மேலும் சிலருக்கு, ரத்தக் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளுடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது.

இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகள்.

* நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது போல தோன்றும் (நெஞ்சில் பாறாங்கல்லை ஏற்றி அமுக்குவது போன்றிருக்கும்.)

* மார்பின் மையப் பகுதியிலிருந்து வலி, வயிறு, தொண்டை, கீழ்த்தாடை, இரண்டு கைகள், குறிப்பாக இடதுகையில் உட்புறம், விரல் வரை பரவக்கூடும்.

* ஒரு சில பேருக்கு மார்பில் வலி இல்லாமல், தொப்புளுக்கு மேலே வயிறு மற்றும் தொண்டை, கீழ்த்தாடை மற்றும் இரண்டு கைகளில் வலி ஆரம்பிக்கலாம்.

* வலியுடன், உடலில் வியர்வை ஆறாகக் கொட்டும், மூச்சு இரைப்பு ஏற்படும், வாந்தி, குமட்டல், மயக்கமும், ஒருவித பயமும் உண்டாகும்.

சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே, அது மாரடைப்பு என்று கருதுவதை விட்டுவிட்டு, அதன் அறிகுறிகளை தெரிந்து கொள்வதற்கு, நாம் மருத்துவப் பரிசோதனைகளை நாடுவது மிகவும் அவசியம். எனவே, நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பென்று தவறாக நினைத்து வருந்த தேவையில்லை.

என் வாழ்க்கைப் பட்டியல்: அமெரிக்கன் ஹாட் அசோசியேஷன் அவர்களது இணையதளத்தில், ஒவ்வொருவரின் வாழ்விலும், அவரவர்களின் பின்னணியின் விவரங்களைப் பொறுத்து, ஆரோக்கியமான நல்வாழ்வு வாழ இன்றைய நிலவரம் என்ன, அதை அடைவதற்கு, நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய, தினந்தோறும் கடைப்பிடிக்க வேண்டிய ஏழு நடைமுறைகள் என்னவென்று, உங்களது இல்லத்திற்கு இலவசமாக அனுப்பி வைக்கின்றனர்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டிய ஒரே காரியம், அவர்களது இணையதளத்தில், உங்களது பின்னணியை பதிவு செய்தால், நீங்கள் கொடுக்கின்ற முகவரியிலோ அல்லது மின் அஞ்சல் முகவரியிலோ, உங்களுக்கான ஏழு நடைமுறை கொண்ட வாழ்க்கைப் பட்டியலை, உடனே அனுப்பி வைப்பர்.

அவர்கள் கூறுகின்ற பரிந்துரைகளை நீங்கள் கடைப்பிடித்து, ஆரோக்கியமான வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டியது நமக்கும், நம் குடும்பத்தினருக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை.

கையளவுள்ள இதயம், பிரமாண்டமாக உள்ள ஒரு மனிதனின் உடல் உறுப்புகள் அத்தனையும் இயங்குவதற்குத், தேவையான ரத்தத்தை, அனுப்பி வைத்து தானே இயங்கும் ஒரு தசைக் கோளம்.

கையளவு இதயத்தின் தாள லயமான சங்கீத ஒலிதான், 'லப்டப் லப்டப்' ஒரு நாளில், லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது நம் இதயம். உடலில் இருக்கும் ஒரு லட்சம் கி.மீ., நீள ரத்த நாளங்களுக்கு, 15,000 லிட்டர் ரத்தத்தைச் செலுத்துகிறது. நம் கையளவு இதயம் நம், 'ரத்தத்தின் ரத்தமான' உடன்பிறப்பு. இந்த உடன்பிறப்பை உருக்குலையாமல் தடுப்பது, நாம் தவிர்க்க முடியாத கடமை; நமக்கு உயிர் மேல் ஆசையிருந்தால்.

காரணங்கள் என்ன?

இதய நோய்க்கான காரணங்களை இரு பிரிவாக நாம் பிரிக்கலாம். அதில் ஒன்று, மாற்றியமைக்க முடிந்தவை; மற்றொன்று மாற்றி அமைக்க முடியாதவை.

மாற்றி அமைக்க முடிந்தவை

* அதிக ரத்த அழுத்தம்

* புகைப்பிடிக்கும் பழக்கம்

* அதிகமுள்ள ரத்த குளுக்கோஸ் (நீரிழிவு நோய்)

* உடற்பயிற்சி இல்லாதது

* ஆரோக்கியமான உணவு சாப்பிடாதது

* கொலஸ்ட்ரால்

* பருமனான சரீரம்

மாற்றி அமைக்க முடியாதவை

* வயது

* பாலினம்

* குடும்ப சரித்திரம்

- மணி லட்சுமிநாராயணன்,

பென்சில்வேனியா, அமெரிக்கா.






      Dinamalar
      Follow us