காலநிலை மாற்றத்திற்கும் மூட்டு வலிக்கும் தொடர்பு உண்டா?
காலநிலை மாற்றத்திற்கும் மூட்டு வலிக்கும் தொடர்பு உண்டா?
PUBLISHED ON : ஆக 03, 2014
மூட்டுக்கள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலிக்கு, காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என, மக்களில் பலர் நம்புகின்றனர். ஆனால், காலநிலை மாற்றத்திற்கும், இந்த வகை வலிகளுக்கும் தொடர்பு இல்லை என, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, அவர்கள் கூறியுள்ளதாவது: வெப்பநிலை அதிகரிப்பு, ஈரப்பதம் அதிகரிப்பு, திடீரென ஏற்படும் அதிகப்படியான வெப்பம் மற்றும் திடீர் பனிப்பொழிவு போன்றவற்றுக்கும், இடுப்பின் கீழ்பகுதியில் ஏற்படும் வலி, மூட்டுக்கள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலிகளுக்கும், எந்த விதமான தொடர்பும் இல்லை.
ஒவ்வொருவருக்கும், அவரவர் வாழ்நாளின் ஒரு கட்டத்தில், எலும்புகள், தசைகள், நரம்புகள், எலும்புகளை இணைக்கும் தசைநார்கள் போன்றவற்றில் வலி ஏற்படுகிறது. இத்தகைய உபாதைகளால், உலக மக்கள் தொகையில், 33 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால், இந்த வலிகள் ஏற்படுவதில்லை. அதற்கு வேறு காரணங்கள் உள்ளன. இவ்வாறு, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

