தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வாய்ப்புண்ணை விரட்டணுமா?

வாய்ப்புண்ணை விரட்டணுமா?

வாய்ப்புண்ணை விரட்டணுமா?


PUBLISHED ON : ஜூன் 28, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

தேன் வாய்ப்புண் விரைவாக குணமாக உறுதி செய்கிறது. வாய்ப்புண் இருக்கும் பகுதியில் தேனை தடவவும். சிறிது மஞ்சளை தேனுடன் கலந்து ஒரு பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும்.

துளசி: துளசி செடியின் இலைகள் ஆச்சரியமான மருத்துவ பண்புகள் கொண்டது. ஒரு அழுத்தத்திற்கேற்ப உடலை பொருந்தும்படி செய்ய உதவும் ஒரு பொருள். தினமும் சில துளசி இலைகளை தண்ணீருடன் மெல்லவும். இவை புண்கள் வேகமாக குணமாக உதவுவதுடன், அது மறுபடியும் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

தேங்காய்: வாய்புண்ணைக் குணப்படுத்த உபயோகமாக இருப்பவை தென்னை மரத்தின் உலர்ந்த தேங்காய் (கொப்பரை), தேங்காய் எண்ணெய் மற்றும் இளநீர் ஆகிய 3 தயாரிப்புகளாகும். இளநீர் குடிப்பது உடலை குளிர்ச்சியாக்க உதவுகிறது. வாய் புண்ணில் நேரடியாக தேங்காய் எண்ணெயை தடவுதல் அல்லது தேங்காயை மெல்வது வலியைக் குறைக்கவும் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

பாப்பி விதைகள்: பாப்பி விதைகள் உடலுக்கு குளிர்ச்சி விளைவை ஏறபடுத்தும் என்று கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி, அளவுக்கதிகமான உடல் உஷ்ணம், வாய்ப்புண்ணாக ஏற்படுகிறது. அதனால் பாப்பி விதைகள் இந்த பிரச்னையைக் கடக்க ஒரு சிறந்த தீர்வாகும். வாய்புண்ணிலிருந்து நிவாரணம் பெற, நசுக்கப்பட்ட கசகசாவுடன் சிறிது சர்க்கரையை கலந்து சாப்பிடவும்.

அதிமதுரம்: ஒரு தேய்க்கும் கல்லில் அதிமதுர தண்டை சிறிது தன்ணீருடன் தேய்த்து அதை புண்கள் உள்ள பகுதியில் தடவவும். அல்லது அதிமதுர தூளை வாங்கினால், அதை சிறிது தேன் அல்லது மருத்துவ தரம் கிளிசரினுடன் கலந்து வாய் புண்ணில் தடவவும். ஒரு டம்ளரில் சூடான பாலில் அதிர மதுரத் தூளை மஞ்சளுடன் கலந்து ஒரு நாளைக்கு இரணடு அல்லது மூன்று முறை சிறந்த விளைவுகளுக்கு குடிக்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us