தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தைராய்டு குறைபாடு கர்ப்பத்துக்கு தடையா

தைராய்டு குறைபாடு கர்ப்பத்துக்கு தடையா

தைராய்டு குறைபாடு கர்ப்பத்துக்கு தடையா


PUBLISHED ON : டிச 10, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''தைராய்டு குறைபாடுடைய பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, மலட்டுத்தன்மை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படலாம்,'' என்கிறார், கே.எம்.சி.எச்., சர்க்கரை பாதிப்பு மற்றும் ஹார்மோன் சிகிச்சை நிபுணர் வித்யா ராஜீவ் ஜஹாகிர்தார்.

மேலும் அவர் கூறியதாவது:தைராய்டு என்பது வண்ணத்துப்பூச்சி வடிவில், கழுத்தின் முன் பகுதியில், அமைந்துள்ள சுரப்பி. இது தைராக்சின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. தைராக்சின் ஹார்மோன் உடலில் உள்ள உறுப்புகள் சீராக செயல்பட உதவுகிறது. கருவுறுதலுக்கு தடையாதைராய்டு கோளாறு, பெண்கள் கருவுறுதலுக்கு தடையாக இருக்கிறது. இக்குறைபாடு இருந்தால், மாதவிடாய் பிரச்னை, மலட்டுத்தன்மை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படலாம். கருவுற்ற பெண்களுக்கு தைராக்சின் குறைவாக சுரந்தால் கருச்சிதைவு, குழந்தைக்கு குறைவான மன வளர்ச்சி, ரத்த அழுத்தம், ரத்த சோகை, குறைபிரசவம் போன்றவை ஏற்படலாம்.

தைராய்டு பிரச்னையை ரத்த பரிசோதனை மற்றும் அலட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறியலாம். தைராய்டு குறைபாடுகளை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.தைராய்டு கட்டிகள் இருந்தால், தைராக்சின் அதிகம் அல்லது குறைவாக சுரக்கலாம். இக்கட்டிகள் சாதாரண அல்லது புற்றுநோய் கட்டிகளாகவும் இருக்கலாம். ஸ்கேன் மற்றும் பயாப்சி மூலம் உறுதி செய்யலாம்.தைராய்டு குறைபாடு மற்றும் கட்டிகள் இருந்தால், ஹார்மோன் சிகிச்சை டாக்டரிடம் உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம்.விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல்போன் எண்ணிலும், drvidya@kmchhospitals.com என்ற இணைதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.அறிகுறிகள் இதுதான்!தைராய்டு சுரப்பியில், தைராக்சின் ஹார்மோன் குறைவாக அல்லது அதிகமாக சுரப்பதால், சாதாரண கட்டிகள் அல்லது புற்றுநோய் கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது. தைராக்சின் குறைவாக சுரந்தால் எடை கூடுதல், மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் பிரச்னைகள், முடி உதிர்வு, வறண்ட தோல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதிகமாக சுரந்தால் எடை குறைதல், பதற்றம், நடுக்கம், வயிற்றுப்போக்கு, இருதய துடிப்பு அதிகரித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் மூச்சு திணறல், உணவு அல்லது நீர் பானங்கள் விழுங்குவதில் சிரமமாகவும், குரல் மாற்றம், வலி ஏற்படலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us