sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/முதுமையில் கண் பாதிப்பு அலட்சியம் வேண்டாம்

முதுமையில் கண் பாதிப்பு அலட்சியம் வேண்டாம்

முதுமையில் கண் பாதிப்பு அலட்சியம் வேண்டாம்


PUBLISHED ON : நவ 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வயசு 60 ஆச்சுன்னா பார்வை மங்கத்தான் செய்யும்' என, நம் வீடுகளில் பலர் அலட்சியமாக இருப்பதை காண்கிறோம். இந்த அலட்சியம் கூடாது என எச்சரிக்கிறார், கோவை அரசு மருத்துவமனை கண் நோயியல் பிரிவு டாக்டர் பிரியதர்ஷினி

அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

முதியோர் மத்தியில் அதிகமாக காணப்படும் பிரச்னை கண் புரை. இதை சீக்கிரம் அறுவைசிகிச்சை செய்துகொள்வது நல்லது. ஒரு சிலர் நீண்டகாலம் விடுவதால் முத்தி வெடித்து, அழுத்தம் அதிகரித்து சிக்கலை ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் பார்வை போகும் அபாயமும் உண்டு.

சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் அதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுடன், கட்டாயம் ஆண்டுக்கு ஒரு முறையாவது கண் விழித்திரை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சர்க்கரை பாதிப்பால் டயபடிக் ரெட்டினோபதி பாதிப்பு ஏற்பட்டு, பார்வை பறிபோகும் வாய்ப்பு உண்டு. ஆரம்பத்தில் கண்டறிந்தால், முறையான சிகிச்சை பெற்று, இருக்கும் பார்வையை தக்கவைத்துக்கொள்ளலாம்.

ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, கண் நரம்பு துண்டிக்கப்படும் வாய்ப்புண்டு. குளூக்கோமா (கண் நீர் அழுத்த நோய்) என்பது அமைதியாக பார்வையை பறிக்கும் நோய். எந்த அறிகுறியும் இருக்காது; ஏதா பிரச்னை என பரிசோதிக்கும் போது, 50 சதவீத பார்வை பறிபோய் இருக்கும்.

கண்களில் கண்ணீர் சுரப்பு நன்றாக இருக்கும். ஆனால், கண்ணீரின் தரம் குறைந்துவிடுவதால், கண் எரிச்சல், மணல் போட்டது போல் உறுத்துவது, போன்ற பிரச்னை ஏற்படும். இதனை டிரை-ஐ என்று கூறுவோம்.

கண் நரம்புகள், கருவிழி ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ சத்து அவசியம். முதிய வயதில் இச்சத்துக்கள் குறையும். ஆகவே சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். கேரட், பப்பாளி, பச்சை காய்கறி, கீரைகள், மீன் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us