தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/எல்லாம் தெரியும்; எதையும் பின்பற்ற மாட்டோம்!

எல்லாம் தெரியும்; எதையும் பின்பற்ற மாட்டோம்!

எல்லாம் தெரியும்; எதையும் பின்பற்ற மாட்டோம்!


PUBLISHED ON : நவ 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் நன்கு படித்த, திறமையான நிபுணர்களிடம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இல்லை. நீரிழிவு நோய் குறித்து தெரிந்தும் அலட்சியமாக இருப்பதும் எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

என்னுடன் டாக்டர்கள் ஆப்ரின் ஷபீர், ஹரிஹரன் சுகுமாரன் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த ஆய்வில், 150 தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் பங்கேற்றனர்.

'டைப் - 2' நீரிழிவு நோய், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், தடைகள் பற்றி ஐ.டி., ஊழியர்கள் எந்த அளவு அறிந்திருக்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ள, கேள்வித்தாள் வழங்கப்பட்டது.

இவர்களில், 65 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் பற்றி நன்கு தெரிந்திருந்தது. 45 சதவீதம் பேர், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றி வருவதாகவும், 68 சதவீதம் பேர் உடற்பயிற்சி செய்வதாகவும், 76 சதவீதம் பேர் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாக கூறினாலும், இவர்களில் யாரும் தொடர்ந்து இவற்றை கடைப்பிடிப்பதில் சிரமம் இருப்பதாக கூறினர்.

நேரமின்மை, அலுவலக பணி முடிந்த பின் ஏற்படும் சோர்வு, வேலை தொடர்பான மன அழுத்தம் இதற்கான காரணங்களாக கூறுகின்றனர்.

இதன் பொருள் என்ன?

ஐ.டி., வல்லுநர்கள் நீரிழிவு அபாயத்தை புரிந்து கொண்டாலும், நீண்ட வேலை நேரம், மன அழுத்தம் மற்றும் கம்ப்யூட்டரில் அதிக வேலைகள் ஆகியவை, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைப் பிடிப்பதை தடுப்பதாக இந்த ஆய்வு காட்டுகிறது.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தே வேலை செய்வது, ஒழுங்கற்ற துாக்க முறைகள் காரணமாக இளம் வயதிலேயே நீரிழிவு நோய், ஐ.டி., ஊழியர்களுக்கு ஏற்படுகிறது.

ஆய்வு சொல்லும் செய்தி

நீரிழிவை தடுக்க விழிப்புணர்வு மட்டும் போதாது. உணவு, உடற்பயிற்சி, இரவில் எட்டு மணி நேர துாக் கத்தை தினசரி ஒழுங்காக கடைப்பிடிக்க, ஊழியர்களை ஊக்குவிக்க வேண் டும்.

அவ்வப்போது நமக்காக செலவிடும் ஐந்து நிமிடங்கள் கூட, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

அலு வலக நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நிற்பது, தண்ணீர் குடிப்பது, இருந்த இடத்திலேயே சிறிய உடற்பயிற்சி செய்வது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

குறிப்பிட்ட மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைகள், ஊட்டச்சத்து விழிப்புணர்வு, வேலை நேரத்தில் உடற்பயிற்சி, இடைவேளைகள் உள்ளிட்ட ஆரோக்கியத்திற்கு அவசியமான வசதிகளை ஊழியர்களுக்கு செய்து தர வேண்டும் என்று ஐ.டி., நிறுவனங்களுக்கு, இந்த மருத்துவ ஆய்வுக் குழு பரிந்துரைக்கிறது.

ஆரோக்கிய குறிப்புகள்

அலுவலக பணியாளர்கள், ஐ.டி., ஊழியர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்பவர்கள்.

1. கம்ப்யூட்டரை 'ஆப்' செய்த உடனேயே 10 நிமிட நடை பயிற்சி செய்வது, உணவை செரிமானம் செய்யவும், சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும்.

2. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதை தவிர்த்து, வீட்டில் சமைத்து சாப்பிடுவது நல்லது.

3. ஆழ்ந்த துாக்கத்திற்கு மாலை 6:00 மணிக்கு 'கேபைன்' பானங்களை தவிர்க்கலாம்.

4. வேலையை துவங்குவதற்கு முன், சில நிமிடங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்வது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

5. நீண்ட நேரம் 'டிவி' பார்ப்பதை விட, தோட்ட வேலை, விளையாட்டு, செல்லப்பிராணி களை நடை பயிற்சிக்கு அழைத்து செல்வது, யோகா பயிற்சி செய்யலாம்.

6. இரவு உணவை 9:00 மணிக்கு முன் சாப்பிடுவது, போதிய அளவு தண்ணீர் குடிப்பது, குறைந்தது 7 -- 8 மணி நேர துாக்கம் ஆகியவை, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக் க உதவும்.

டாக்டர் அஸ்வின் கருப்பன்,பொதுநல மற்றும் நீரிழிவு நோய் மருத்துவர்,கிளெனிக்கல்ஸ் மருத்துவமனை,சென்னைபோன்: 79967 89196மெயில்: info.chn@gleneagleshospitals.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us