PUBLISHED ON : ஜன 05, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜேஷ், மயிலாடுதுறை: எனக்கு கை, கால் வலி உள்ளது. வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது. இதற்கு, சூரிய வெளிச்சத்தில் நடைப்பயிற்சி, தினமும் பால் எடுத்துக் கொள்ளும்படி டாக்டர் கூறினார். பால் எடுத்துக் கொள்வதால், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதா?
வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு, இனம் தெரியாத உடல்வலி உண்டாகும், வாய்ப்பு உள்ளது. வைட்டமின் டி குறைபாட்டுக்கு, பால் சார்ந்த பொருட்கள் அவசியம்.
எண்ணெய் பலகாரங்கள், ஓட்டல் உணவுகள், பாஸ்ட் புட், பொறிக்கப்பட்ட உணவு வகைகளை விட, பாலில், கொழுப்புச்சத்து குறைவே. அதுமட்டுமின்றி, கொழுப்பு அகற்றப்பட்ட பால் அருந்தினால், உங்களுக்குத் தேவையான, வைட்டமின் டி கிடைக்கும். கொழுப்புச் சத்தும் அதிகமாகாது.

