sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

தீராத முதுகு வலியா; கவலை வேண்டாம்!

/

தீராத முதுகு வலியா; கவலை வேண்டாம்!

தீராத முதுகு வலியா; கவலை வேண்டாம்!

தீராத முதுகு வலியா; கவலை வேண்டாம்!


PUBLISHED ON : ஜன 12, 2014

Google News

PUBLISHED ON : ஜன 12, 2014


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீண்ட தூரம் வாகனம் ஓட்டுதல் மட்டுமல்ல; தலையணையை உயரமாக வைத்து படுப்பதாலும் முதுகு வலி, கழுத்து வலி வரும். தாய்ப்பால் சரியாக கிடைக்காத குழந்தைகள், புத்தகப் பையை நீண்ட தூரம் சுமந்து செல்லும் குழந்தைகளுக்கு முதுகு வலி வர வாய்ப்புள்ளது

1. முதுகு வலிக்கு காரணம் என்ன?

முதுகுத் தண்டு வடம், எலும்பு, நரம்பு தொடர்புடையது. இதற்கு இடையில் உள்ள ஜவ்வு பிதுங்கி, நரம்பை அழுத்துவதால், முதுகு வலி ஏற்படுகிறது. இது போன்று, கழுத்து தண்டு வடத்திலும், ஜவ்வு பாதிப்பால் வலி ஏற்படும். திடீரென மயக்கம் வரும்; கால்கள் செயல் இழக்கும் அபாயமும் உள்ளது.

2. அதிக பாரம் தூக்குவது காரணமா?

அதிக எடை தூக்குவோர், மூட்டை தூக்குவோருக்கு, இந்த பாதிப்பு வரும். நீண்ட தூரம் வாகனத்தில் பயணம் செய்வோர் மட்டுமின்றி, ஷேர் ஆட்டோக்களில் நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கும், முதுகு வலி வரும். ஷேர் ஆட்டோக்களில், அதிர்வைத் தாங்கும், 'ஷாக்-அப்சர்வர்' இல்லாததால், வாகனம் அதிர்ந்து, முதுகுத் தண்டுவடத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

3. கம்ப்யூட்டரே கதி என கிடப்போருக்கு முதுகு வலி வருமா?

கம்ப்யூட்டர் முன், மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பதால், தண்டு வடத்தை தாங்கிப் பிடிக்கும் தசைகள், பலவீனம் அடையும். இதன் காரணமாக, எலும்பு, நரம்பும் பாதிக்கப்பட்டு, முதுகு வலி வரும். நீண்ட நேரம், கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோர், இடைஇடையே, சற்று ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது.

4. முதியவர்கள் முதுகு வலியால் அவதிப்படுகின்றனரே?

வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது இயல்பு தான்; 35 வயது ஆனாலே, எலும்பு தேய்மானம் வந்து விடுவதால், வயது ஆக ஆக, முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. கழுத்தை ஒரே பக்கமாக திருப்பி வைத்தல், நீண்ட நேரம் ஒரே பொருளை உற்றுப் பார்த்தல் போன்றவற்றால், கழுத்து வலியும் ஏற்படலாம்.

5. சிறு வயதில் பலருக்கு முதுகு வலி வருகிறதே...?

அழகு குறைந்துவிடும் என, பெண்கள், குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுக்காவிட்டால், குழந்தைகளுக்கு, இது போன்று சிறு வயதில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், அளவுக்கு அதிகமாக புத்தகங்களை சுமந்து செல்கின்றனர். நீண்ட தூரம் புத்தகப் பை சுமந்தால், கழுத்து வலியும், முதுகு வலியும் வரும்.

6. உணவு முறையால் பிரச்னை தீருமா?

சோயா பீன்ஸ், ஆப்பிள், திராட்சை, பப்பாளி மற்றும் இறால் போன்றவற்றை, உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் செய்வது, எலும்புகளுக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும். கார்களில் நீண்ட தூர பயணம் செய்வோர், இடுப்பில், 'பெல்ட்' அணிவது நல்லது.

7. தலையணைக்கும், முதுகு வலி, கழுத்து வலிக்கும் தொடர்பு உண்டா?

நிச்சயமாக. தலையணை என்பது, படுக்கும்போது, உடலுக்கும், தலைக்கும் இடையிலான பகுதியின் அளவுக்கு ஏற்பத் தான் இருக்க வேண்டும். தலையணையை உயரமாக வைத்தல், இரண்டு, மூன்று தலையணைகளை அடுக்கி வைத்துப் படுப்பது ஆகியவை, ஆபத்தானவை. தலையணைக்கு பதில், கையை மடக்கி ஒரு பக்கமாக படுத்தலும், பாதிப்பை ஏற்படுத்தும். காலுக்கு தலையணை வைப்பது சரியல்ல. ஆழ்ந்த தூக்கத்தில் தரை நார்கள் தளர்ந்து, நரம்பு பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

8. சூரிய ஒளியில் நிற்க வேண்டும் என்பது சரியா?

சூரிய உதயம், சூரிய அஸ்தமன (காலை, மாலை) நேரங்களில், உடலில் சூரிய ஒளி படும்படி நிற்பது நல்லது. இதன்மூலம் விட்டமின்-டி கிடைக்கும். இதனால், உடல் பலகீனம் குறையும். பால் குடித்தால் உடம்பு குண்டாகும் என, பலர் பால் குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். இது சரியான நடைமுறை அல்ல. இதனால் வேறு விதமான பாதிப்புகள் வரும்.

9. விளையாட்டு வீரர்கள் என்ன செய்யலாம்?

விளையாட்டு வீரர்கள், கடும் உடற்பயிற்சிக்கு நேரடியாக செல்லாமல், கை, கால் இணைப்புகளை அசைத்து, எளிய பயிற்சி செய்வது அவசியம். அதாவது, 'வார்ம் அப்' செய்து கொண்டு, தசை நார்கள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ப தயாரான பின், கடும் பயிற்சிகளில் ஈடுபடலாம். இதனால், தசைப்பிடிப்புகள் ஏற்படாது; முதுகு வலியும் வராது தடுக்கலாம். எல்லாரும் எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்வது அவசியம்.

டாக்டர் பி.பாலகிருஷ்ணன்,

எலும்பு சிகிச்சை நிபுணர்,

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை.






      Dinamalar
      Follow us