sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

/

இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?


PUBLISHED ON : ஜன 12, 2014

Google News

PUBLISHED ON : ஜன 12, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனித குலத்திற்கு, இயற்கை அளித்த மாபெரும் பரிசு, இளநீர். சுத்தமான, சுவையான சத்தான பானம். கோடையின் வெப்பத்தை தணிக்கும், குளிர்பானம். ஒரு லிட்டர் இளநீரின் கலோரி அளவு, 17.4/100 கிராம்.

'இளநீர் வழுவழுப்பானது, இனிப்பானது, விந்துவை அதிகரிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், சிறு நீரகத்தைச் சுத்திகரிக்கும்' என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.

இளநீரின் மருத்துவக் குணங்கள்:

* ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு, இளநீர் ஒரு நல்ல மருந்து.

* வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள், இளநீரில் உள்ளன.

* இளநீர் உடல் சூட்டைத் தணிக்கிறது.

* வேர்க்குரு, வேனற்கட்டி, பெரியம்மை, சின்னம்மை மற்றும் தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த, இளநீரை உடம்பின் மீது பூசிக் கொள்ளலாம்.

* இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.

* இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக, காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானம்.

* ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்கிறது.

* முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும், இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

* சிறுநீர் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது.

* சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகிறது.

* சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது.

* நெருக்கடி காலக்கட்டங்களில், நோயாளிகளுக்கு இளநீரை நரம்பு ஊசி மூலம் செலுத்தலாம்.

* இளநீர் மிகமிகச் சுத்தமானது. உடலில் சூட்டை உண்டாக்காது. சிவப்பு ரத்த அணுக்களை அழிக்காது. இதனால் தான், ரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக, இளநீர் பயன்படுத்தப்படுகிறது.

* இளநீரின், சிறந்த மின் பகுனித்தன்மை, மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது.

* ரத்தத்தில் கலந்துள்ள, நச்சுப்பொருளை அகற்ற இளநீர் உதவுகிறது.

நம் ரத்தத்தில் இருப்பது போல, சரியான அளவில் மின்பகுனி உப்புக்கள் இளநீரில் இருப்பதால், இளநீர், இயற்கை தந்த நல்லதொரு டானிக். சரியாகச் சொல்வதானால், இளநீர் ஒரு உயிர்த்திரவம். புது இளநீர், உடலுக்கு நல்லது. எப்போதும், வெட்டிய உடனேயே, இளநீரைப் பருகி விட வேண்டும். இதை உண்டால், சளி பிடிக்காது; மாறாக, சளி அகலும்.

இளநீரில் அதிக அளவில் சர்க்கரைப் பொருட்களும், தாது உப்புக்களும் மற்றும் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும் உள்ளன.

சர்க்கரை சத்துக்கள்: குளுக்கோஸ் மற்றும் புரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள், இளநீரில் காணப்படுகின்றன. இளநீரிலுள்ள, குளூக்கோஸ் மற்றும் புரக்டோஸ், தேங்காய் முதிர்ச்சியடையும் போது, சுக்ரோசாக மாறி விடுகிறது. முற்றின தேங்காய் நீரில் காணப்படும் மொத்த சர்க்கரைச் சத்தில், 90 சதவீதம், சுக்ரோஸ் ஆகும்.

தாது உப்புகள்: இளநீரில், பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புகள், அதிக அளவில் காணப்படுகின்றன.

இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது, பொட்டாசியம். இளநீரில் காணப்படும் பொட்டாசியத்தின் அளவு, தென்னைக்கு இடப்படும் பொட்டாஷ் (சாம்பல் சத்து) உரங்களின் அளவைப் பொறுத்து, மாறுபடுகிறது. பொட்டாசியமும் மற்ற தாது உப்புகளும் நிறைந்த இளநீர் தான், நம் உடலிலிருந்து, சிறுநீரை அதிக அளவில் வெளியேற்ற உதவுகிறது.

புரதச் சத்துக்கள்: இளநீரில், புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச்சத்தின் தரம், பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது. இளநீரில், கூட்டுப் புரதங்கள் அதிக அளவில் இல்லாததால், நோயாளிகளுக்கும், அதிர்ச்சியினால் ஏற்படும் அபாயம் மிகக் குறைவு.

வைட்டமின்கள்: இளநீரில், அஸ்கார்பிக் அமிலமும், வைட்டமின் பி பிரிவு அமிலங்களும் உள்ளன. அஸ்கார்பிக் அமிலத்தின் அளவு, 22 - 37 மி.கி./100 மி.லி., ஆகும். இளநீரைச் சுற்றியிருக்கும் பருப்பின் வளர்ச்சிக்கேற்ப, இதன் அளவு குறைந்து வரும். காபி, டீயை கைவிட்டு, எல்லாரும் இளநீர் பருகிட, எங்கும் அமைப்போம் இளநீர் பந்தல்!

டாக்டர் பா.இளங்கோவன்,

கோவை.






      Dinamalar
      Follow us