sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 02, 2026 ,சித்திரை 19, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

முருங்கை என்ற மாமருந்து ஆரோக்கியத்துக்கு விருந்து!

/

முருங்கை என்ற மாமருந்து ஆரோக்கியத்துக்கு விருந்து!

முருங்கை என்ற மாமருந்து ஆரோக்கியத்துக்கு விருந்து!

முருங்கை என்ற மாமருந்து ஆரோக்கியத்துக்கு விருந்து!


PUBLISHED ON : ஜூன் 11, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 11, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீரையில் பொதுவாக சத்துக்கள் அதிகம். குறிப்பாக முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. முருங்கை மரம் முழுவதும், மனிதனுக்கு பயனளிக்கும் மரமாகும். முருங்கை கீரையை வேக வைத்து, அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை, முருங்கைக் கீரை நீக்கும். அதனால், முருங்கையை 'மருத்துவ பொக்கிஷம்' என்று சொல்கின்றனர்.

இதன் காய், உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க கூடியது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கை பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நல்லது. முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து, வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி, காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து, சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பு வலிகள் நீங்கும்.

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில், நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்காய் கை கண்ட மருந்தாகும்.

முருங்கைக்காயை வேக வைத்து, கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக்காய் சாம்பார் சுவையானதாக மட்டுமல்லாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ, இரு முறையோ முருங்கைக்காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடையும். வாய்ப்புண் வராதபடி பாதுகாக்கிறது. முருங்கை சூப், காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

முருங்கை விதையை கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தி யை உண்டு பண்ணும். முருங்கைப்பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும், அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கை இலைச்சாறுடன், பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், ரத்தம் சுத்தியாகும்; எலும்புகளை வலுப்படும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் உள்ளது.

கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்புச்சளி, சுவாசக்கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப்பூ சூப் சாப்பிடுவது மூலம் ஆண், பெண் மலட்டுத் தன்மை நீங்கும். முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவினால், முகப்பருக்கள் மறையும். முருங்கைக்காய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி, ரத்தவிருத்தி, தாதுவிருத்தி செய்யும்.

முருங்கை இலைச்சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருகினால் மஞ்சள் காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து எண்ணெய் தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலி தீர, பயன்படுத்தலாம். முருங்கை வேரில் இருந்து சாறெடுத்து, பாலுடன் சேர்த்துப் பருகி வந்தால் காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணமாகும்.






      Dinamalar
      Follow us