sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 03, 2026 ,சித்திரை 20, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

விரும்பி சாப்பிடுங்க ராகி வேகமாக பறக்கும் வியாதி

/

விரும்பி சாப்பிடுங்க ராகி வேகமாக பறக்கும் வியாதி

விரும்பி சாப்பிடுங்க ராகி வேகமாக பறக்கும் வியாதி

விரும்பி சாப்பிடுங்க ராகி வேகமாக பறக்கும் வியாதி


PUBLISHED ON : ஜூன் 11, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 11, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் முன்னோர்கள், நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்ததற்கு, ராகி போன்ற சத்துள்ள சிறு தானிய உணவுகளை சாப்பிட்டதே காரணமாகும். அரிசி உயர்தர உணவு என்றும், ராகி மலிவான உணவு என்றும் பலர் கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும்.

ராகியின் விலையைப் பார்க்காமல், அதன் பலனைப் பார்க்க வேண்டும்.

அரிசி, கோதுமையை விட ராகி சத்து மிகுதியானதாகும். ராகியால் ரத்தம் சுத்தியாகி, எலும்பு உறுதிப்பட்டு சதை வலுவாகும். மலச்சிக்கல் நீங்கி, பசி தாங்கும். 'ராகி' சத்து மிகுந்தது என்பதற்காக, அதனை அடிக்கடியும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும்.

முதலில் மாதம் இரு முறை எனவும், பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். ராகியில் களி ஒன்று தான் செய்ய முடியும் என்றில்லை. ராகி இட்லி, ராகி உளுந்து தோசை, ராகி அடை, ராகி பயத்தம் பருப்பு காரப்புட்டு, ராகி இடியாப்பம், ராகி ரொட்டி, ராகி பக்கோடா, ராகி தோசை, ராகி சேமியா என,

பல வகை பதார்த்தங்கள் செய்யலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ராகியில், பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ளது. ராகிக்கூழ் குழந்தைகளுக்கேற்ற முழுமையான உணவாகும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. நூறு கிராம் ராகியில், 350 மி.கி., அளவு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து மிகுந்துள்ளது. இது மற்ற, எல்லா வகை தானியங்களை விடவும் அதிகமாகும்.

அதேபோல, 100 கி., ராகியில் 4 மி.கி., வரை இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள், ராகி சாப்பிட்டு குணமடையலாம். ராகி, அதிக நார்ச்சத்து உடையது, குளூட்டன் இல்லாதது. தையமின், ரிபோபிளேவின் ஆகிய, உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன.

ராகியில் உள்ள ட்ரிப்டோபேன் எனும், அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது. லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது. ராகி, உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

குடலுக்கு வலிமை அளிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும். ராகியில் அதிக கால்சியம் உள்ளதால், சிறுநீரகக்கல் கோளாறு உள்ளவர்கள் குறைவாக உண்ணுதல் நலம். கோதுமை முதலான உணவுப் பொருட்களால் வாந்தி, பேதி என ஒவ்வாமை ஏற்படும். கேழ்வரகை ஒரு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு, 6 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை, எளிதில் ஜீரணமாகக் கூடியதும், ஊட்டச்சத்தை அள்ளித் தருவதுமான மிகச் சிறந்த உணவுகளில், ராகியும் ஒன்று. ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, கேழ்வரகை சுத்தம் செய்து, ஓர் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும்.

பின், தானியத்தை மாவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு காட்டன் துணியில், பிழிந்து தெளிந்த பாலாய் பிரித்து எடுத்துக்கொள்ளவும்.

இந்தப் பாலை காய்ச்சி, கூழ் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கேழ்வரகு ஒவ்வாமை உடைய பெரியவர்களும், இந்த முறையில், ராகியின் பயனை அடையலாம்.






      Dinamalar
      Follow us