sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 03, 2026 ,சித்திரை 20, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

தோல் நோய்களுக்கு அருகம்புல் சிறந்தது

/

தோல் நோய்களுக்கு அருகம்புல் சிறந்தது

தோல் நோய்களுக்கு அருகம்புல் சிறந்தது

தோல் நோய்களுக்கு அருகம்புல் சிறந்தது


PUBLISHED ON : ஜூன் 11, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 11, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்று சொல்வார்கள். நோயாளிகளுக்கு புல் மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. புல்லை மட்டும் இரையாக உண்ணும் விலங்குகளுக்கு, குடல்நோய் வருவதில்லை. மாறாக புல்லால் குடல் புண்கள் குணமடைகிறது.

அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய, தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடிச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.

தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய் நீக்கும் உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயல்படுகிறது. கணு நீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை, 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி, 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் ரத்த ஒழுக்கு நிற்கும். வெப்பம் தணியும்; மாத விலக்கு சிக்கல் நீங்கும்.

அருகம்புல் மூலம் 30 கிராம், கீழாநெல்லி மூலம், 15 கிராம் ஆகியவற்றை மையாய், அரைத்து தயிரில் கலக்கிக் காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர்கடுப்பு, சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை தீரும். அருகம்புல், 30 கிராம் அரைத்து, பாலில் கலந்து பருகி வந்தால், ரத்த மூலம் குணமடையும். வேண்டிய அளவு புல் எடுத்து, சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி, சில மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வேர்க்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு, வேனல் கட்டி தீரும்.

அருகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம், ஒரு லிட்டர் நீரில், சேர்த்து கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருகினால், மருந்து வீரியத்தால் ஏற்படும், பல் சீழ், வாய் வயிறு வெந்து காணப்படுதல் ஆகியவை குணமாகும். அருகம்புல் மூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு, 15 நாள்கள் கடும் வெயிலில் வைத்து 45, நாட்கள் தலையில் தடவி வந்தால், கண்நோய்கள் தீரும்.

ஒரு கிலோ அருகம் வேரை, ஒன்றிரண்டாய் இடித்து, 8 லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கலந்து அமுக்கிராக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு, 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்து, கலக்கி சிறுதீயில் பதமுறக் காய்ச்சி வடித்து எடுத்த எண்ணெயை கிழமைக்கு ஒரு முறை, தலையில் இட்டு அரைமணி கழித்து குளித்து வந்தால், வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெடிப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும். அருகம் வேர், நன்னாரி வேர், ஆவரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு, 50 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு, அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து, 100 மி.லி. யாக ஒரு நாளைக்கு 5 வேளை கொடுத்தால், மிகையான தாகம் தணியும். தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, அருகம்புல்லால் கிடைக்கும் நன்மைகளை பெறவும்.






      Dinamalar
      Follow us