தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குழந்தைகளுக்கு அவசியமா காது பரிசோதனை...!

குழந்தைகளுக்கு அவசியமா காது பரிசோதனை...!

குழந்தைகளுக்கு அவசியமா காது பரிசோதனை...!


PUBLISHED ON : டிச 25, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* காது குறைபாடுள்ள குழந்தையை கருவில் அடையாளம் காணமுடியுமா?

காது கேளாமை பாதிப்பு ஒரு குடும்பத்தில் தொன்று தொட்டு வந்தால் கருவிலேயே பாதிப்பை கண்டுபிடித்துவிடலாம். இதற்கு ஆம்னியூ சென்டிசிஸ், கோரியானிக் வில்லா சாம்பிளிங் என்னும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

* எந்தெந்த சந்தர்ப்பங்களில் பிறந்த குழந்தைக்கு காது கேட்கும் திறனை சோதிக்க வேண்டும்?

பிறந்த குழந்தையை 5 நாட்களுக்கு மேல் ஐ.சி.யூ.,வில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், குடும்பத்தில் காது கேளாமை பாதிப்பு வழி வழியாக வந்தால், பெண் கர்ப்பம் தரித்திருக்கும் சமயத்தில் ெஹர்பிஸ் சைட்டோ மெகளோ வைரஸ், ரூபெல்லா, சிபிலிஸ், டாக்சோ பிளாஸ்மோசிஸ் வைரஸ் தொற்று பாதித்திருந்தால், குழந்தை பிறந்தவுடன் மூளையில் தொற்று, ரத்தத்தில் செப்சிஸ் என்னும் தொற்று இருந்தால் காது பரிசோதனை அவசியம்.

* என்னென்ன தொந்தரவுகள் இருந்தால் குழந்தைக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்?

குழந்தை பிறந்ததில் இருந்து 2 மாதங்களுக்குள், திடீரென உரத்த சத்தம் கேட்டால் குழந்தையின் உடல் கலவரமடைந்து குலுங்கும். 3 மாதத்தில் இருந்து பெற்றோரின் குரலை கேட்க துவங்கும். 6 மாதங்களில் கண், தலை முதலியவற்றை சத்தம் வரும் திசையில் திருப்பும். 12 மாதங்களில் ஓரிரு சொற்கள் சொல்லத் துவங்கும். இந்த தொடர்ச்சியில் குழந்தையின் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனடியாக காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுக வேண்டும்.

* பிறந்த குழந்தையின் காது கேட்கும் திறனை அறிவதற்கான பரிசோதனைகள் உள்ளனவா?

ஆட்டோமேட்டட் ஆடிட்டரி பிரைன் ஸ்டெம் ரெஸ்பான்ஸ், ட்டோ ஆக்கோஸ்டிக் எமிசன் ஆகிய இரு பரிசோதனைகள் உள்ளன.இதன் மூலம் காது கேட்கும் திறனை துல்லியமாக அறியலாம். குழந்தை பிறந்த முதல் நாளில் இருந்தே இப்பரிசோதனையை செய்ய இயலும்.

* பிறந்த குழந்தைக்கு காது பரிசோதனையால் பலன் உண்டா?

குழந்தை பிறந்த 24-72 மணி நேரத்தில் காது கேட்கும் திறனை பரிசோதிப்பது நல்லது. குழந்தைக்கு காது கேட்கும் திறனை ஸ்கிரீனிங் பரிசோதனை மூலம் ஒரு மாதத்திற்குள் கண்டறிய வேண்டும். அப்போது தான் குறையேதும் இருந்தால், தேவையான இதர பரிசோதனைகளை 3 மாதங்களுக்குள் முடிக்க முடியும். அதன் பிறகும் குறை இருந்தால் தலையீடு செய்து குறைகளை நீக்கும் வழிமுறையை 6 மாத காலத்தில் துவங்கலாம். குழந்தையின் காது கேட்கும் திறனுடன் பேச்சும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. எனவே குழந்தை பேசி பழகும் 9 மாதம் முதல் 3 வருடத்திற்குள் பரிசோதனை செய்வது அவசியம்.

* காது நன்றாக கேட்டு படித்துக் கொண்டிருக்கும் குழந்தை, திடீரென நாம் கேட்கும் கேள்வியை திரும்பத் திரும்ப சொல்ல சொல்கிறது என்றால் என்ன பிரச்னை?

சிறு குழந்தைகளுக்கு அடினாய்டு, மூக்குக்கு பின் பகுதியில் உள்ளது. சில சமயம் அடிக்கடி சளி பிடிப்பதால் அடினாய்டு மிகவும் பெரிதாக வீங்கி விடும். இதனால் குழந்தைக்கு வாயை திறந்து துாங்குதல், குறட்டை போன்ற பாதிப்பு ஏற்படும். மட்டுமின்றி அடினாய்டு பெரிதானால் யூஸ்டேசியன் டியூப் முழுமையாக அடைபட்டுவிடும். இதனால் காதில் நெகட்டிவ் காற்றழுத்தமும், நீரும் கட்டி விடும். நீரில் ஒலி அலைகள் செல்லும்போது கேட்கும் அளவு மிகவும் குறைகிறது.

* காதில் நீர், பசை போன்ற திரவம் இருப்பதால் குழந்தைக்கு ஏற்படும் காது கேளாமையை சரி செய்வது எப்படி?

முதலில் காதடைப்புக்கு காரணமான அடினாய்டு கட்டியை நீக்க வேண்டும். பின்னர் காதில் நீர் உள்ளது என்பதை உறுதிப்படுத்த இம்பிடன்ஸ் என்னும் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பின்னர் காதில் உள்ள நீரை உறிஞ்ச வேண்டும். இதற்கு வெளி மற்றும் உள்காதுக்கு நடுவே சிறு டியூப் பொருத்தப்படும்.அதன் வழியே படிப்படியாக நீர் வெளியேறும். சில மாதங்களில் மீண்டும் காதில் காற்று நிரம்பும். அதன்பின் குழந்தைக்கு கேட்கும் திறன் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். பொருத்தப்பட்ட குழாய் 9 மாதங்களில் தானாகவே விழுந்துவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us