sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கலர் கலரா சாப்பிடுங்க!

கலர் கலரா சாப்பிடுங்க!

கலர் கலரா சாப்பிடுங்க!


PUBLISHED ON : மார் 15, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2015


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இயற்கையில் கிடைக்கும் காய்கறி, பழங்களை கலர் கலராக சாப்பிடுவது, குழந்தைகள் முதல் அனைவரின் உடலுக்கும் மிகவும் நல்லது என்று உணவு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிலருக்கு குறிப்பிட்ட காய்கறிகள் மிகவும் பிடிக்கும். அதற்காக, அந்த காய்கறிகளை மட்டும் அடிக்கடி வாங்கி வந்து, சமைத்து சாப்பிடுவார்கள். இப்படி, ஒரே நிறத்தில் உள்ள காய்கறியை சாப்பிட்டால், ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்து பற்றாக்குறை ஏற்படும் என, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

சமையலில் காய்கறிகளை பயன்படுத்தும்போது, ஒரே வகையான காய்கறியாக எடுத்துக்கொள்ளாமல் கேரட், பீட்ரூட், தக்காளி, முட்டைகோஸ், முள்ளங்கி என்று எல்லா காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேபோல், பழங்களிலும் குறிப்பிட்ட பழங்களை மட்டும் சாப்பிடாமல் ஆப்பிள், திராட்சை, மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என்று எல்லா பழங்களுக்குமே முக்கியத்துவம் தர வேண்டும்.

உதாரணமாக, மதிய உணவில் குறைந்தது, 7 வெவ்வேறு இயற்கை வண்ணம் கொண்ட உணவுப் பொருட்கள் இருப்பது மிகவும்

நல்லது. ப்ரெஷ் ஆக வாங்கும் காரட்டின் மஞ்சள் கலர், சத்துள்ள காஷ்மீர் ஆப்பிளின் சிவப்பு கலர், திராட்சையின் அடர் நீல நிறம், கீரையின் பச்சை பசேல் நிறம்... இப்படிப்பட்ட காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும்.

இவ்வாறு உணவு எடுத்துக்கொள்ளும் போது, அதிக அளவிலான உயிர்ச்சத்துகள் நமக்கு கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுப்பதற்கு, நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us