PUBLISHED ON : அக் 28, 2012

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணன், கோபி: என் மனைவிக்கு, 25 வயதாகிறது. எட்டு மணி நேரம் விமானத்தில் பயணித்த அவருக்கு, காலில் வீக்கமும், ஒரு வாரத்தில் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. அவருக்கு, 'பல்மோனரி எம்போலிசம்' இருப்பதாக கூறுகின்றனர். இதற்கு என்ன அர்த்தம்?
ஒருவர், 48 மணி நேரத்திற்கு மேல் படுக்கையில் இருந்தாலோ, அமர்ந்திருந்தாலோ, காலில் ரத்தம் கட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி ரத்தம் கட்டும்போது, அது நுரையீரலில் 'பல்மோனரி எம்போலிசம்' ஆக மாற வாய்ப்புள்ளது. உடனே டாக்டரிடம் காண்பித்து, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.