sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

எல்லாம் குணமாகும் விரைவில்

/

எல்லாம் குணமாகும் விரைவில்

எல்லாம் குணமாகும் விரைவில்

எல்லாம் குணமாகும் விரைவில்


PUBLISHED ON : செப் 17, 2017

Google News

PUBLISHED ON : செப் 17, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பம் பூவை பொடி செய்து, பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால், வாந்தி நிற்கும். மிளகை பாலுடன் சேர்த்து அரைத்து, கொட்டை பாக்கு அளவு, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

பார்லி அரிசி, 20 கிராம், புளிய இலை 40 கிராம் சேர்த்து காய்ச்சி குடித்தால் மலச்சிக்கல் குணமாகும். வாழை காயை வாரத்தில், ஒரு நாள் சமைத்து

உண்டால், வயிற்றுப்புண் வராது. பூண்டுடன், குப்பைமேனி கீரை சேர்ந்து அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், வயிற்றுப்

பூச்சிகள் ஒழியும்.

தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், குடல்புண் மற்றும் சருமநோயை குணப்படுத்தும். நாள்தோறும், ஒரு துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால், உடலில் செரிக்கும் திறன் அதிகரிக்கும். சுரைக்காயை வாரம் இரு முறை உணவோடு சாப்பிட்டு வந்தால், தொப்பை குறையும். மருதோன்றி இலையை அரைத்து நீரில் கலக்கி, கழுவி வந்தால் உடலில் உள்ள சிறுகாயம், புண் சிராய்ப்புகள் குணமாகும். ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி, கட்டி வந்தால், மூட்ட வீக்கம் குணமாகும். ஜாதிக்காய், சந்தனம், மிளக்கு மூன்றையும் சேர்த்து அரைத்து தடவி வந்தால், பருக்கள் குணமாகும்.

சந்தன கட்டையை, எலுமிச்சை சாறு விட்டு கல்லில் உரசி, அதை உடலில் நீர் வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் குணமாகும். உடலில் தோல் பூஞ்சை போன்று உருவாகி அரிப்பு ஏற்பட்டால், கலப்படமும் இல்லாத தேங்காய் எண்ணெயை பூசி வந்தால் குணமாகும். இதை எல்லாம் கடைபிடித்தாலும், நாள்தோறும் உடற்பயிற்சி இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அதேபோல, உணவு அதிகமாக உண்டாலும், பல்வேறு பிரச்னைகளை கொண்டு வரும். அளவான உணவே ஆரோக்கியத்தை தரும். நாள்தோறும் யோகா செய்யும் பழக்கம் இருந்தால், ஒருவேளை உணவு நமக்கு தேவை இல்லை. காலை நேரத்தில், பிரணாயாமம் செய்தால், எக்காலத்திலும் சுவாச பிரச்னை வராது.

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து, நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். மனநலக்கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில், தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் வைட்டமின் பி6 தர்பூசணியில் அதிகம்.

ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் சிறந்தது. பூண்டு சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, புற்றுநோய் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை, உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும். சுண்டைக்காயை உணவில் சேர்த்தால், நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை விலகி விடும்.






      Dinamalar
      Follow us