தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/எளிய மருத்துவம் கைவசம்!

எளிய மருத்துவம் கைவசம்!

எளிய மருத்துவம் கைவசம்!


PUBLISHED ON : செப் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

சின்ன, சின்ன உபாதைகளுக்கு, நம் வீட்டிலேயே, சிறந்த இயற்கை மருந்துகள் உள்ளன. அவை என்ன என்று தெரிந்துக் கொண்டால், பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும், இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால், சீக்கிரம் குணமாகி விடும். பசுவின் பாலில் சற்று நீர் விட்டு, இதில் வெண்தாமரை மலர்களை போட்டுக் காய்ச்சி, பாத்திரத்தை இறக்கி வைத்து, அதில் வரும் ஆவியை, கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

தினமும் குடிநீரை காய்ச்சும் போது, ஒரு கைப்பிடி சுக்கை தட்டிப் போடலாம். தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இது, ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் லேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால், பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

மலச்சிக்கல் இருக்காது.

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்றாக காய்ச்சி, ஆற வைத்து, நெஞ்சு சளி குணமாக பயன்படுத்தலாம். ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, இரண்டு இலவங்கம் சேர்த்து, நன்கு அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால், தலைவலி ஓடிவிடும். சுக்கு, பால் மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட்டால், தொண்டை கரகரப்பு குணமாகும். நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

ஒரு டம்ளர் நீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்க, அஜீரணம் சரியாகும். கருவேப்பிலை, சுக்கு, சீரகம், ஓமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால், அஜீரணம் சரியாகும். அல்லது வெற்றிலை, நான்கு மிளகு இவற்றை மென்று தின்றால், இக்கோளாறு சரியாகும்.

சீரகம் கலந்த குடிநீரை குடித்து வந்தால், நன்கு ஜீரணமாவதோடு, உடல் குளிர்ச்சியடையும். அல்லது ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால், வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து, மோரில் கலந்து குடிக்க, வயிற்று வலி நீங்கும். ஒரு துண்டு சுக்கை, தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர, மூக்கடைப்பு விரைவில் நீங்கும். வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து, நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின், தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த நீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்தால், சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால், ஓரிரு நாளில் குணமாகும். வாய்ப்புண்ணுக்கு கொப்பரை தேங்காயை, கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டால் குணமாகும். ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியை கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us