PUBLISHED ON : மார் 08, 2015
தேர்வு நேரத்தில் மாணவர்களின் உடல்நலத்தில் கவனம் அவசியம்: பனீர் , பால், தயிர் மாதிரியான புரதச் சத்து அதிகமாக இருக்கிற ஊணவுகள் மாணவர்களின் மூளையை முடுக்கிவிட பயன்படும். தயிர்ல இருக்கிற ப்ரோபையோடிக்-ங்கற ஹூரோ-பாக்டீரியா உடம்புல நோய்கள் பரப்புற, உபாதைகள் கொடுக்கிற வில்லன் பாக்டீரியா கூட்டத்துக்கு எதிரா போராடக்கூடியது. உடம்புல இருக்குற நீர் வத்திப் போச்சுன்னா, தேர்வு அறையில உடல் சோர்ந்து, கவனம் சிதறி, மூளையோட செயல்பாடு படிப்படியா குறைஞ்சிடும். அதனால தண்ணீரோட அவசியத்தை குழந்தைகளுக்கு புரிய வைக்கணும். நிம்மதியான தூக்கம் அவசியம். பரீட்சைக்கு முந்தின நாள், கண் முழிச்சு படிக்கிறதை அனுமதிக்கவே கூடாது. சாக்லெட், கேக், பிஸ்கட், மாதிரியான இனிப்புகளையும் உடம்புல இருக்குற நீரை உறிஞ்சி குடிக்கிற டீ, காபி, சர்க்கரை கலந்த சோடா மாதிரியான பானங்களையும் அவுங்க கண்ணுலேயே காட்டக்கூடாது. தேர்வு நேரத்துல மன அழுத்தம் இருக்கும். விட்டமின் பி2, இ, மெக்னீஷியம், துத்தநாகம் அடங்கியிருக்கிற பாதாம் மன நிலையை ஒழுங்குபடுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும்.
பிஸ்தா, வால்நட் போன்ற உலர்ந்த பழங்கள் ரத்த அழுத்தம், மன அழுத்தத்தை விரட்டும். ஆரஞ்ச், ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி போன்ற பழங்கள் மன அழுத்தம் தரக்கூடிய கார்டிசோல் ஹார்மோன்களை குறைக்கக்கூடிய சக்தி உள்ளவை.
ட்ரைடோஃபோன்ங்குற ஆசிட் அதிகமாக இருக்கிற வாழைப்பழம், மன அழுத்தத்தை அண்டவிடாத செரோடோனின் அதிகமாக சுரக்கிற வேலையை சுலபமா செய்யும். எனவே பெற்றோர்கள்தான் கவனத்துடன் செயல்பட்டு, சத்துள்ள ஆகாரங்களை பிள்ளைகளுக்குத் தரவேண்டும்.

