PUBLISHED ON : மார் 08, 2015
சித்த மருத்துவத்தில், டெங்கு காய்ச்சலை குணப்படுத்த, நிலவேம்பு கஷாயம் பரிந்துரை செய்யப்படுகிறது. இதன்படி, நிலவேம்பு கஷாயத்துடன், சந்திரோதய மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, மாதுளை மணப்பாகு, அன்னபேதி செந்தூரம் போன்ற சித்த மருத்துவ மருந்துகளை உண்டு பயன்பெறலாம். நில வேம்பு குடிநீர் கஷாயம் என்பது, 9 வகையான மூலிகைகள் கலந்து தயாரிக்கப்படுகிறது. கசப்பு தன்மை கொண்ட நில வேம்பு கஷாயம் தயாரிக்க, நில வேம்பு, விலாமிச்சை வேர், பேய்ப்புடல், சுக்கு, சந்தனம், பற்படாகம், வெட்டி வேர், கோரை கிழங்கு, மிளகு போன்றவற்றை ஒரே அளவாக சேர்த்து இடித்து, தூளாக மாற்றி கொள்ள வேண்டும். 25 கிராம் சூரணத்தை 800 மில்லி நீரில் ஊற வைத்து, நன்றாக காய்ச்சி 125 மில்லி ஆக குறைத்து கொள்ள வேண்டும். 20 மில்லி நிலவேம்பு கஷாயத்தை 3 டம்ளர் நீரில் கலந்து பெரியவர்கள், காலை, மாலை என இரு நேரம் குடிக்கலாம். குழந்தைகளுக்கு 15 மில்லி கஷாயத்தை நீரில் கலந்து, காலை, மாலை என, இரு நேரம் கொடுக்கலாம்.

