PUBLISHED ON : நவ 04, 2018

குழந்தையின்மை மலட்டுத்தன்மை என்றால் என்ன?
குழந்தையின்மை, மலட்டுத்தன்மை என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருகூடல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையை குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்டுகளிலும், பெண்களிலும் இருக்கலாம். மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருகூடல் தன்மை காணப்படும்.
இந்தியாவில் 10 முதல் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத்தன்மை பிரச்னை உள்ளது. இது ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. எவ்வித கருத்தடை சாதனங்களையும் யபன்படுத்தாமல் ஒரு ஆண்டு கால தாம்பத்தியத்துக்கு பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்துக்குள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
பொதுவாக குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே பிரச்னை இருக்க வாய்ப்புள்ளது. ஆணிடம் போதுமான அளவு உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அவை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்க செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும்.
பெண்ணுக்கு கரு முட்டையின் உற்பத்தி சரியாக இருப்பதுடன், கருமுட்டை கருப்பைக்கு வரும் வழி அடைப்பு எதுவும் இன்றி இருக்க வேண்டும். கருவை வளர்க்கக்கூடிய பலம் உள்ள நிலையில் கருப்பை இருக்க வேண்டியதும் அவசியம். தாம்பத்தியமும் சரியாக இருக்க வேண்டும்.
இவை சரியாக இருந்தால் குழந்தை பிறப்பில் பிரச்னை ஏற்படாது. ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம், ஆண்மை குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைவு அல்லது இல்லாமல் இருப்பது மலட்டுத்தன்மைக்கு காரணமாக அமைகிறது.
மலட்டுத்தன்மை நீக்கும் சிகிச்சை உள்ளதா
ஆண், பெண் இருவருமே அதிக உடல் எடையை குறைக்க வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு முறைப்படி மருந்து எடுத்து கொள்ள வேண்டும். பெண்கள் மாதவிலக்கு கோளாறுகள், பரம்பரை காரணங்கள் இருப்பின் முன் கூட்டியே பரிசோதனை செய்து முறையான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். மது, போதை பழக்கத்தை கைவிட வேண்டும்.
பாலியல் ரீதியான குறைபாடுகளை மறைக்காமல் முன் கூட்டியே பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
தம்பதியினர் 35 வயது வரை குழநதை பெறுவதை தள்ளிப்போடுவது கூடாது. சத்தான உணவு, கீரை, பழங்கள் போன்ற இயற்கை உணவுகள், உடற்பயிற்சி, குறித்த காலத்தில் குழந்தை பெறுவது, ஆணும், பெண்ணும் மகிழ்ச்சியான சூழலில் அன்பை பகிர்ந்து கொள்வது, குழந்தையின்மை பிரச்னைக்கான வாய்ப்புகளை குறைக்கும்.
- டாக்டர் மதுமிதா
ஓமியோபதி நிபுணர், மதுரை
89392 66767
