தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள்

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள்

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள்


PUBLISHED ON : நவ 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2018


Follow on Google
அ நிறம் | அளவு

பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன இக்காய்ச்சல் பரவுவது எப்படி?

எச்.1 என் 1 என்ற வைரஸ் கிருமியால் பன்றி காய்ச்சல் பரவுகிறது. இக்கிருமி இன்புளூயன்ஸால் என்ற வைரஸ் வகையை சேர்ந்தது. மழை, குளிர் காலங்களில் புளூ காய்ச்சலை எச் 1 என் 1 வைரஸ் கிருமி ஏற்படுத்தும்.

இக்கிருமியால் பாதிப்பு ஏற்படும் போது லேசான தலைவலி, மூக்கடைப்பு, சளியுடன் கூடிய வறட்டு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

எதிர்ப்பு சக்தி இல்லாதவர் மற்றும் கிருமி தொற்று அதிகமாக இருப்பவர்களுக்கு நோயுடன் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் கடும் காய்ச்சல் மற்றும் மூச்சு முற்றல் ஏற்படும். கடுமையான உடல் வலி இருக்கும்.

சில நேரங்களில் வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். அப்படி ஏற்படும் போது தான் உயிருக்கு ஆபத்தை உண்டு பண்ணும் ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறி விடுகிறது.

இந்த நோய் வராமல் இருப்பதற்கு தடுப்பூசிகள் உள்ளன. நோயை குணப்படுத்த மாத்திரைகளும் உள்ளன. முக்கியமாக இந்த அறிகுறிகள் வரும்போது ஆரம்ப நிலையிலேயே பரிசோதனைகள் செய்து நோயை குணப்படுத்தலாம்.

பன்றிக்கும், பன்றிக்காய்ச்சலுக்கும் தொடர்பு உள்ளதா

இந்த காய்ச்சல் பன்றிக்கும், மனிதனுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். பன்றி மூலமும் எச் 1 என் 1 வைரஸ் கிருமி பரவும். எனவே இக்காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் என்றானது.

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு எப்போது அதிகரிக்கும்

பன்றிக் காய்ச்சலை உண்டு பண்ணும் வைரஸ் கிருமி உடலுக்குள் வந்தவுடன் மூன்று நாட்களில் பாதிப்பின் அறிகுறி தெரியவரும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி மளமளவென குறையும். சக்கரை நோய், இருதய நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். முக்கியமாக கடுமையான உடல்வலி அதிகரிக்கும். நுரையீரல் பாதிப்பு அதிகரிக்கும்போதும், மூளை பாதிப்பு ஏற்படும் போதும், மூளை பாதிப்பு ஏற்படும் போது மற்றும் நுரையீரல், இருதயத்தில் நோய் கிருமி பாதிப்பு ஏற்படும் போது உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.

குழந்தைகளை பன்றிக் காய்ச்சல் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

இருமல் மூலமும், பாதிக்கப்பட்டவர்கள் உபயோகப்படுத்திய பொருட்கள் மூலமும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

ஆரம்ப நிலையில் சிகிச்சை மேற்கொண்டால் நோயை பூரணமாக குணப்படுத்தால். நோய் தாக்கியோரின் அருகில் இருப்பவர்கள் தடுப்பூசிகள் போட்டு கொள்வது, மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.

- டாக்டர் ஜெ. சங்குமணி

சர்க்கரை நோய் நிபுணர், மதுரை.

sangudr@yahoo.co.in


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us