குண்டு மல்லி,கொஞ்சம் கேளு! - ஆரோக்கியத்தை உணர்த்திய விஷயம்!
குண்டு மல்லி,கொஞ்சம் கேளு! - ஆரோக்கியத்தை உணர்த்திய விஷயம்!
PUBLISHED ON : நவ 04, 2018

சினிமாவில் நடிக்க துவங்கிய புதிதில், ஒரு நடிகையாக, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுவேன்.
ஆனாலும், நான் எதிர்பார்த்த அளவு உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியவில்லை. சாப்பிட்டவுடன், வயிற்றில் ஒரு கனமான உணர்வு வரும். காரணம், நான் தேர்வு செய்த குறைந்த கொழுப்பு உணவுகள் எல்லாம் மேற்கத்திய உணவுகள். குழந்தை பருவத்தில், என் அம்மா அப்படி எதுவும் எனக்கு கொடுத்து வளர்க்கவில்லை. எப்போதும் இட்லி, தோசை, அரிசி சாதம், ரொட்டி, காய்கறிகள் இது தான் மெனு.
அதன்பின் தான் புரிந்தது. நமக்கு ஏற்ற உணவை சாப்பிடுவது தான் ஆரோக்கியம். கொழுப்பு பற்றிய எண்ணத்தை மறந்து விட்டு, தயிர், நெய், அரிசி சாதம் என, வழக்கத்தில் உள்ள உணவிற்கு மாறிய பின், கன உணர்வு போய்விட்டது.
அந்தந்த பருவத்தில் கிடைக்கும் மாம்பழம், சீதாப் பழம் என்று நம் உள்ளூர் விஷயங்களை தேர்வு செய்தவுடன், என் வாழ்க்கையே ஆரோக்கியமாகியதை உணர்கிறேன்.
கரீனா கபூர் கான், பாலிவுட் நடிகை
