sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 06, 2026 ,சித்திரை 23, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

முதுகுவலியை புறமுதுகிட்டு விரட்ட உதவும் பயிற்சிகள்!

/

முதுகுவலியை புறமுதுகிட்டு விரட்ட உதவும் பயிற்சிகள்!

முதுகுவலியை புறமுதுகிட்டு விரட்ட உதவும் பயிற்சிகள்!

முதுகுவலியை புறமுதுகிட்டு விரட்ட உதவும் பயிற்சிகள்!


PUBLISHED ON : ஜூன் 11, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 11, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று பலரின் பணி, மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து மேற்கொள்ள வேண்டியதாகவே உள்ளது. இதுபோன்று, மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு அமர்பவர்கள், போதிய முன் எச்சரிக்கைகளுடன் செயல்படாத பட்சத்தில், முதுகு வலி பிரச்னை, கூடிய விரைவில் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால் இது போன்ற வலிகளுக்கு, நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை, கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்னைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.

எனவே, வேலையின் போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினால், முதுகு வலி பிரச்னையிலிருந்து தப்பித்து விடலாம். நீங்கள் செய்ய வேண்டியவை:

உட்காரும் தோரணை: அலுவகத்திலோ, வீட்டில் 'டிவி' பார்க்கும் போதோ, உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலைப்பளுவால் சற்று சோர்ந்து சவுகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி, உங்களை சோம்பல் அடைய செய்யும்.

இதனை மனதில் கொண்டு, அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும். வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி: கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு, அவ்வப்போது உட்காருங்கள். எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கையை தரையில் வைத்து, நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள். அடுத்ததாக, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தபடி, கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். சிறிது சிறிதாக அதிகரித்து, 2 நிமிடம் வரை இப்பயிற்சியை தொடர்ந்து செய்யலாம்.

உணவு முறை: பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

வைட்டமின்கள்: கால்சியம் எலும்பிற்கு முக்கிய தேவை. உணவில் உள்ள கால்சியத்தை உடல் தக்கவைத்து கொள்ள, வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை, உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை, எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவை.

எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்சியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவற்றை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.






      Dinamalar
      Follow us