sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 07, 2026 ,சித்திரை 24, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

அகத்திக்கீரையில் இருக்கிறது விஷத்தை முறிக்கும் ஆற்றல்

/

அகத்திக்கீரையில் இருக்கிறது விஷத்தை முறிக்கும் ஆற்றல்

அகத்திக்கீரையில் இருக்கிறது விஷத்தை முறிக்கும் ஆற்றல்

அகத்திக்கீரையில் இருக்கிறது விஷத்தை முறிக்கும் ஆற்றல்


PUBLISHED ON : ஜூன் 11, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 11, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அகத்திக்கீரை உடல் சூடு தணிக்கிற, வயிற்றுப்புண்ணை ஆற்றுகிற, மனக்கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை குணமாக்கும், அருங்குணங்கள் கொண்டது. இது மொத்தம், 63 வகை சத்துக்களை கொண்டதாக, சித்த மருத்துவம் கூறுகிறது. அகத்திக்

கீரையில், 8.4 சதவீதம் புரதச்சத்து, 1.4 சதவிகிதம் தாது உப்புகள் மட் டுமின்றி, மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின், ஏ, சி ஆகிய சத்துக்களும் உள்ளன. அகத்தி என்றால், 'அகம் தீ' என்று பொருள்.

அகத்திக்கீரை உடலில், ரத்த ஓட்டத்தை சமப்படுத்தி, சீரான ரத்த ஓட்டத்தை தருவதாலேயே, அதற்கு 'அகத்தி' என்று பெயர் வந்ததாக ஒரு கருத்து உண்டு. இந்தக்கீரை உடலின் உள் உறுப்புகளையும் சுத்தப்படுத்தும் பணியினைச் செய்கிறது. இந்தக்கீரை பெரும்பாலும், வெற்றிலைக்கொடிக்கால்களில், வெற்றிலைக்கொடி படவர்வதற்கும், மிளகுத்தோட்டத் தில் மிளகுக்கொடி படர்வதற்காகவும் துணையாக, சிறுமரமாக வளர்க்கப்படுகிறது. அகத்தி, சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி, பேய் அகத்தி என பல வகை இருந்தாலும், பொதுவாக இதில் 2 வகை உண்டு.

ஒன்று வெள்ளை நிறப்பூக்களையும், மற்றொன்று சிவப்பு நிறப்பூக்களையும் கொண்டது. இவற்றின் இலை, பூ, பட்டை மற்றும் வேரும் மருந்தாக

பயன்படும் அருங்குணங்களை கொண்டதாகும்.

அகத்தியின் அருங்குணம்: இந்த அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டால், எளிதாக ஜீரணமாகும். பித்த நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து, கண்கள் குளிர்ச்சியாகும். சிறுநீர், மலம் சிக்கலின்றி வெளி யேறும். மன இறுக்கம் தளர்ந்து மனக்கோளாறுகளும் சரியாகும். 'அல்சர்' குணமாக அருமையானதொரு மருந்தாகும். கீரையுடன், சின்ன வெங்காயம்,மிளகு, சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண் எளிதாக குணமடையும்.

இந்த கீரையின் சாற்றை, சேற்றுப்புண்களில் பூசி வந்தால், விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது, கீரையை மட்டும் அரைத்துத்தடவி வந்தால், விரைவில் ஆறிவிடும். தேமல் வந்த இடத்திலும், அகத்தி இலையை தேங்காய் எண்ணெய் விட்டு, வதக்கி சிறு சிறு விழுதுகளாக அரைத்துப்பூசி

வந்தால், விரைவில் குணமடையும். இந்தக்கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து, மருக்களின் மீது தொடர்ந்து பூசிவந்தால், அவை காய்ந்து உதிர்ந்து மறையும். அகத்திப்பூவை பொரியல் செய்து சாப்பிட்டால், கண் எரிச்சல், தலைசுற்றல், நீர்கக்கடுப்பு சரியாகும். பீடி, சிகரெட் குடிப்பவர்கள் இந்த அகத்திக்கீரை மற்றும் பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால், அவர்களது உடலில் ஏறியிருந்த விஷம் மலத்துடன் சேர்ந்து வெளியேறும்.

புகைப்பிடிக்கும் ஆர்வமும் குறையும். அகத்திக்கீரையுடன், சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், இதய படபடப்பு, இதயவீக்கம், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் கூட கட்டுக்குள் வரும். அகத்திப்பட்டையை 50 கிராம் எடுத்து, இடித்து, 8 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சி, வடிகட்டிக் குடித்தால், அம்மை நோய் கூட இறங்கி விடும்.

அகத்தி, மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது. எனவே, சித்தமருந்துகள் சாப்பிடும் போது, அகத்திக்

கீரையை சாப்பிடக்கூடாது. இந்தக்கீரையுடன், கோழிக்கறி சாப்பிடக்கூடாது. மது அருந்தி விட்டு அகத்திகீரையை சாப்பிட்டால், மாரடைப்பு ஏற்படும். தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே, மேற்கண்ட மருத்துவ ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us