தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொழுப்பை விரட்டும் கடுகு

கொழுப்பை விரட்டும் கடுகு

கொழுப்பை விரட்டும் கடுகு


PUBLISHED ON : ஜன 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 03, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

கடுகில் உள்ள மருத்துவ குணங்களுக்கு குறைவேயில்லை. ஏராளமான மருத்துவ குணங்கள் கடுகுக்கு உள்ளது. அதனால்தானோ என்னவோ, வீட்டின் அனைத்து வகை குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள். கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டி

களுக்கு, கடுகு அரைத்து பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால், ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரிதான பின்பு அரைத்துப் பூசினால், இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.

கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணெய்ச்சத்து உள்ளது. சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. நூறு கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகுக்கு உண்டு. போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற பி காம்பிளக்ஸ் வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கின்றன.

நியாசின் (வைட்டமின் பி3) ரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளன. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு, செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகின்றன. ரத்த அணுக்கள் உற்பத்தியிலும், கடுகு முக்கிய பங்கு வகிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us