தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/முகத்தில் கருமை நீக்க ஆலோசனை

முகத்தில் கருமை நீக்க ஆலோசனை

முகத்தில் கருமை நீக்க ஆலோசனை


PUBLISHED ON : ஜன 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 03, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

சூரியக்கதிர்கள் அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, சருமத்தின் நிறம் கருமையாகிறது. இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க, இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இருக்காது. சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

எலுமிச்சை மற்றும் தேன்: இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், இரண்டு ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.

மஞ்சள் தூள்: வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலி வை அதிகரிக்க, 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு: எலுமிச்சை ஒரு சிறப்பான ப்ளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். எலுமிச்சையின் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது இந்த கலவையைக் கொண்டு முகத்தில் மென்மையாக பூசி, குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை அகலும்.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.

கற்றாழை ஜெல்: கற்றா ழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் தொற்றுகள் இருந்தால் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us