தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொழுப்பு கல்லீரலை தவிர்க்கலாம்!

கொழுப்பு கல்லீரலை தவிர்க்கலாம்!

கொழுப்பு கல்லீரலை தவிர்க்கலாம்!


PUBLISHED ON : ஜூன் 03, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வயிற்றுப்போக்கு



ஒரு ஆப்பிள், கால் டீ ஸ்பூன் சுக்கு சேர்த்து, அரைத்து, இரண்டு வேளை சாப்பிடலாம்.

ரத்த சுத்தி



இருபது கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

ரத்த சோகை!



வாரத்தில், இரண்டு முறை வேப்பம் பூ வை ஏதாவது ஒரு வகையில் சமையலில் பயன்படுத்தலாம்.

இடுப்பு வலி



ஒரு பல் பூண்டு, அரை டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, உணவிற்கு பின், இரண்டு வேளை சாப்பிடலாம்.

தோல் வறட்சி



இரவு துாங்கப் போவதற்கு முன், உடல் முழுதும் தேங்காய் எண்ணெய் தடவலாம்.

கொழுப்பு கல்லீரல்



அரை டீ ஸ்பூன் தனியா விதைகளை, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 30 நிமிடங்கள் ஊற வைத்து, நீரை குடித்து விட்டு, ஊறிய விதைகளை மென்று சாப்பிட வேண்டும்.

அசிடிட்டி



ஒரு ஏலக்காயை நிதானமாக மென்று, சாரை விழுங்கி விட்டு, விதை, தோலை துப்பி விட வேண்டும்.

சைனஸ்



அரை டீ ஸ்பூன் பட்டை துாளுடன், தேன் கலந்து, வெறும் வயிற்றில், தொடர்ந்து, 45 நாட்கள் சாப்பிட வேண்டும்.

பெண்களுக்கு



அரை டீ ஸ்பூன் துளசி விதைகளை, அரை டம்ளர் நீரில் இரவு முழுதும் ஊற வைக்கவும். இந்த நீரை மறுநாள் காலை முதல் இரவு வரை குறிப்பிட்ட இடைவெளியில், அரை டீ ஸ்பூன் குடித்தால், பெண்களின் வெள்ளை படுதல் பிரச்னை தீரும்.

துாக்கம்



அரை டீ ஸ்பூன் கசகசா, தோல் நீக்கிய நான்கு பாதாம் இரண்டையும் சாப்பிட்டால் அமைதியான துாக்கம் வரும். தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு, 10 நாட்கள் இடைவெளி விட்டு, தேவையெனில் மீண்டும் சாப்பிடலாம்.

வறட்டு இருமல்



வறட்டு இருமல் இருந்தால் துளசி, இஞ்சி, மிளகு இவற்றை தவிர்க்க வேண்டும்; இது இருமலை அதிகமாக்கும்.

இருமல்



வெதுவெதுப்பான நீரில் சிறிது வெல்லம் கலந்து குடிப்பது, இருமலுக்கு நிவாரணம் கிடைக்கும். பீர்க்கங்காய், சிறிது பெருங்காயம் சேர்த்து சாப்பிடுவது, சீறுநீர் நன்கு வெளியேற உதவும்; குறிப்பாக, பெண்களுக்கு நல்லது.

டாக்டர் மது கார்தீஸ்,

சித்த மருத்துவர்,

சென்னை

99944 93687

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us