தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/"காய்ச்சலுடன் நடைப் பயிற்சியா'

"காய்ச்சலுடன் நடைப் பயிற்சியா'

"காய்ச்சலுடன் நடைப் பயிற்சியா'


PUBLISHED ON : மார் 23, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 23, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எனது வயது 59. சமீபத்தில் எனது ரத்த அழுத்தத்தை

பரிசோதனை செய்தபோது, 160/100 என்றளவில் உள்ளது. எனது வயதுக்கு இதனை நார்மல் என எடுத்துக் கொள்ளலாமா?


முந்தைய கால மருத்துவத்தில், வயதுக்கு ஏற்ப ரத்த அழுத்தம்

இருக்கும் எனக் கருதினர். அதாவது அறுபது வயதில் 160, எழுபது வயதில் 170, எண்பது வயதில் 180 வரை இருக்கும் என எண்ணினர். ஆனால் தற்போதைய நவீன மருத்துவ வழிகாட்டுதலின்படி, ஒருவரது எந்த வயதிலும், எந்தத் தருணத்திலும், 140/90க்கு கீழ், 120/80 க்குள் இருந்தாக வேண்டும்.

எனவே நீங்கள் உடனடியாக உங்கள் டாக்டரை சந்தித்து, உயர் ரத்த அழுத்த மருந்தை எடுத்துக் கொள்வது அவசியம். தற்போது ரத்த அழுத்தத்திற்கு பக்கவிளைவு இல்லாத மருந்துகள் உள்ளன.

* நான் தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்கிறேன். சிலநாட்கள் தாமதமாக தூங்கினாலும் அதிகாலையிலும், காய்ச்சல், உடல்வலி இருந்தால் அதைப் பொருட்படுத்தாமலும் நடைப் பயிற்சி மேற்கொள்கிறேன். இதுசரிதானா?

தினசரி நடைப் பயிற்சி உடலுக்கு பலவகைகளில் நன்மை அளிக்கிறது. குறிப்பாக ரத்தஅழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. ரத்தக் குழாய் நோய்கள் வராமல் தடுக்கிறது. இதுமட்டுமின்றி, மனதுக்கும் பல வழிகளில் நன்மை அளிக்கிறது. இருப்பினும் தினசரி நம் உடலுக்கு குறைந்தபட்சம் ஏழுமணி நேரம் தூக்கம் மற்றும் ஓய்வு அவசியம். காலதாமதமாக தூங்கினால், தாமதமாக நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால் காய்ச்சல், உடல்வலி இருந்தால், அன்று நடைப்பயிற்சியை

தவிர்ப்பது நல்லது.

* எனக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு எக்கோ பரிசோதனை செய்ததில், Mடிடூஞீ Mடிtணூச்டூ கீஞுஞ்தணூஞ்டிtச்tடிணிண என வந்துள்ளது. இதற்காக, உணச்டூச்ணீணூடிடூ 2.5 மி.கி., என்ற மருந்தை தொடர்ந்து எடுத்து வருகிறேன்.தற்போது எனக்கு வறட்டு இருமல் வந்து கொண்டே இருக்கிறது. நான் என்ன செய்வது?



Mடிடூஞீ Mடிtணூச்டூ கீஞுஞ்தணூஞ்டிtச்tடிணிண என்பது, இருதயத்தின் இடதுபுறம் உள்ள மைட்ரல் வால்வில் சிறிதளவு ரத்தக் கசிவு உள்ளது என்பதை குறிக்கிறது. இதற்கு ஆறுமாதங்களுக்கு ஒருமுறை, எக்கோ பரிசோதனை அவசியம். 'எனலாப்ரில்' என்ற மருந்து, இந்த ரத்தக்கசிவுக்கு சிறந்த மருந்து. ஆனால் இம்மருந்தை எடுக்கும் ஒருசிலருக்கு வறட்டு இருமல் பக்கவிளைவாக வரக்கூடும். எனவே உங்கள் டாக்டரை சந்தித்து, இதனை நீக்கிவிட்டு, அதற்கு பதில் வேறு மருந்தை எடுத்துக் கொள்வது நல்லது. இம்மருந்தை நிறுத்தினாலே உங்களுக்கு வறட்டு இருமல் நின்றுவிடும்.

- டாக்டர் சி.விவேக்போஸ்,

மதுரை. 0452 - 233 7344

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us