தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கோடையில் கவனம்!

கோடையில் கவனம்!

கோடையில் கவனம்!


PUBLISHED ON : மார் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போதிய மழை இல்லாமல், வெயில் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. இச்சமயத்தில், வெளியில் பணிக்கு செல்பவர்களுக்கு, உடலில் நீர் வறட்சி ஏற்படும். இதுபோன்ற சமயத்தில், உடலில் நீர் வறட்சியாகாமல் இருக்க, தேவையான அளவு நீரையும், அதற்கு ஏதுவான பழங்களையும் உட்கொண்டு வந்தால், எவ்வித பாதிப்பில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.

போதியளவு நீர் குடிப்பதன் மூலம், உடலை குளிர்ச்சியாக வைக்க முடியும். நீர் அதிகம் பருகுவதன் மூலம், ஈரப்பதம் எளிதில் ஆவியாவதை தவிர்க்க முடியும். வெளியில் செல்லும் போது, காய்ச்சிய நீரை கொண்டு செல்லும் வகையில், 'வாட்டர் கேன்' வைத்துக் கொள்ள வேண்டும்.

'ஏசி' அறையில் இருப்பவர்களுக்கு, தண்ணீர் தாகம் அதிகம் எடுக்காது. இதனால், நீர் குடிப்பதையே மறந்து விடுவார்கள். எனவே, அவ்வப்போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் பருகாமல் இருந்தால், அது சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும். எனவே, உடல் வறட்சியடையாமல் இருக்க, அவ்வப்போது, நீரை பருக வேண்டும். இதில், சீரகம், துளசி இலை போட்டு பருகுவதன் மூலம், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

காய்கறிகள்: உலர்ந்த பழங்கள் உட்கொள்வதை குறைத்து, புதிய பழங்கள் உட்கொள்வதை அதிகரிக்கலாம். உண்ணும் உணவில், சர்க்கரை இல்லாமல், சாலட்டுகள் மற்றும் புதிய சாறுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதாலும், கோடையில் இது அதிகம் கிடைப்பதாலும், இதை போதியளவு சாப்பிடுவது, உடலை வறட்சியின்றி வைப்பதோடு, இதில் உள்ள லைகோபைன், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சரும செல்களை பாதுகாத்து, சரும புற்றுநோய் வருவதை தடுக்கும்.

திராட்சை, ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி. இதில் உள்ள பைட்டோகெமிக்கல், புற்றுநோய், இதய நோய் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகளை தடுக்கும்.

சிறுநீரக தொற்று நீங்கும்: கோடையில் அதிகம் கிடைக்கிறது மாம்பழம். இரும்புச்சத்து மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே, போதியளவு இதை உட்கொண்டால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

ஸ்ட்ராபெர்ரியை சாப்பிட்டால், கோடையில் ஏற்படும் பிரச்னையாக, சிறுநீரக பாதையின் ஏற்படும் நோய் தொற்றுகளை தவிர்க்கலாம். சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சையை, சாறாக்கி, கோடையில் அவ்வப்போது குடித்தால், தாகம் தணிவதோடு, உடலுக்கு வேண்டிய வைட்டமின் 'சி' சத்தும் கிடைக்கும். அடர் சிவப்பு நிற செர்ரிப் பழங்கள், மிகவும் சுவையுடன் இருப்பதோடு, ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தவை.கோடையில் சாப்பிடுவதற்கு ஏற்றது.

சரும செல்களுக்கு பாதுகாப்பு: வாழைப்பழத்திலும், பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இது உடலை வலுவோடும், சுறுசுறுப்புடனும் இருக்கச் செய்யும். முக்கியமாக நெல்லிக்காயை தவிர்க்கக்கூடாது. ஏனெனில், இதில், வைட்டமின் 'சி', கால்

சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பெர்ரியில் ஒன்றான ப்ளாக்பெர்ரியில், பாலிபீனால் என்னும் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், சரும செல்களை பாதுகாக்கும். முடிந்த வரையில், இதை வாங்கி உட்கொண்டால், உடலுக்கு நன்மை கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us