தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கசப்பு சுவையின் இனிப்பு

கசப்பு சுவையின் இனிப்பு

கசப்பு சுவையின் இனிப்பு


PUBLISHED ON : மார் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகற்காய் சமையல் என்றால், குழந்தைகள் சாப்பிட, ரொம்பவே அடம் பிடிப்பர். உட்கொள்ள வைப்பதில், தாய்மார்கள் பாடு பெரும்பாடாகும். பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை.

தற்போது ஆசியநாடுகளில் பரவலாக விளைகிறது.

பொதுவாக, பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை, மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை, கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கின்றனர்.

பாகற்காயை, எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து சமைப்பது சிறந்தது என்று கருதப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள், பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல், காய்ச்சல், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும், பாகற்காயை தாராளமாக உண்ணலாம்.

தாவரங்களின் இன்சுலின்: குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில், 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது. பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும். நார்ப்பொருட்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களை கொண்டது. 'பாலிபெப்டைடுபி' எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதை தாவரங்களின் 'இன்சுலின்' என்றும் சொல்கிறார்கள். ஏனெனில், தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது, பாகற்காய் தான்.

பாகற்காயை உண்பதால், 'டைப் 2' நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது. பாகற்காய் விதையில், சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில், 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது, கருவில் வளரும் குழந்தைக்கு, நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிகரிக்கும் ஜீரண சக்தி: சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான, 'வைட்டமின் சி', பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகற்காய் விதையில், 84 மி.கிராம் 'வைட்டமின் சி' உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீரேடிக்கல்களை விரட்டியடிக்கும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல், பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும். 'வைட்டமின்பி3', 'வைட்டமின் பி5', 'வைட்டமின் பி6' போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும், பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது.

பித்தம் நீங்கும்: பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன. தினமும், ஒரு டம்ளர் பாகற்காய் சாறு அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனை காணலாம்.

பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும். பாகற்காயை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை பருகி வந்தால், அதிகமான பித்தம் நீங்கும். பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில், தொடர்ந்து அருந்தி வந்தால், வயிற்று உபாதைகள் நீங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us