sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/ருசிக்க மறந்த உணவுகள்

ருசிக்க மறந்த உணவுகள்

ருசிக்க மறந்த உணவுகள்


PUBLISHED ON : பிப் 24, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும், சத்தான உணவுகள் மிகவும் அவசியம். குழந்தை பிறந்து, ஒரு வயதுக்கு பின், திட உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுக்க துவங்கும்போதே, அவை, சத்தான உணவாகவும், அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான உணவாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில், சாமை இட்லி, சத்தான உணவு தான்! சந்தேகமேயில்லை.

தேவையானவை

சாமை ¼ கிலோ

உளுத்தம் பருப்பு 100 கிராம்

வெந்தயம் 1 தேக்கரண்டி

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை கழுவி தனித்தனியாக ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின், இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து, ௮ மணிநேரம் புளிக்கவிட வேண்டும். பின், இட்லி குக்கரில், இட்லிகளாக ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுத்து, அதனோடு இஞ்சி சேர்த்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.

பயன்கள்:

சாமை உணவு, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. அரிசியை தொடர்ந்து பயன்படுத்துவதை குறைத்து சாமையை, அதற்கு மாற்றாக பயன்படுத்தினால் நல்லது. காரணம், அதில் கார்போஹைட்ரேட் குறைவு. சாமையில் தைமன், தைபோபிலிமின், போலிக் அமிலம் மற்றும் மெக்னீஷியம் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட, சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

- லீலாவதி சீனிவாசன்,

சமையற்கலை நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us