sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : பிப் 24, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1'தைராய்டு' என்பது என்ன?

நமது உடம்பில், பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை, ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உடலில் உள்ள செல்களுக்கு அவற்றை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைக்கும். அவற்றில் ஒன்றுதான், தொண்டையில் இருக்கும், 'தைராய்டு' சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோனின் பெயர், 'தைராக்சின்'.

2'தைராய்டு' சுரப்பியின் பயன் என்ன?

இதயத்தை, சீராக வைக்க உதவுகிறது. உடல் வளர்ச்சிக்கும், உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும் 'தைராக்சின்' ஹார்மோன்கள் பெரிதும் உதவுகின்றன. அதோடு, மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இனப்பெருக்க உறுப்புகளின் வேலைகள், சரியாக நடைபெற மறைமுகமாக உதவுகிறது.

3 'தைராய்டு' குறைபாட்டில் இருவகை உள்ளதாமே!

ஆம். ஒன்று தைராய்டு அதிகமாக சுரப்பது, மற்றொன்று, தைராய்டு குறைவாக சுரப்பது.

4'தைராய்டு' இருப்பதற்கான அறிகுறிகள்?

முடி உதிர்தல், மூட்டுகளில் வலி, உடல் சோர்வு ஆகியவை. உடல் சோர்வு வழக்கமானதை

விட வித்தியாசமாக இருக்கும். மாதவிடாயில் பிரச்னை, கழுத்து வீக்கம், மன அழுத்தம் ஏற்படுவதோடு எந்த நேரமும், ஒருவித மன கஷ்டத்துடன், எதையும் சரியாக செய்ய முடியாத நிலை உருவாகும்.

5 'தைராய்டின்' பாதிப்புகள் என்னென்ன?

அதிகமாக, 'தைராக்சின்' சுரந்தால் எடை குறையும்; இதயத்துடிப்பு அதிகமாகும்; கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை, வயிற்றுப்போக்கு என, பல சிக்கல்கள் ஏற்படும்.'தைராக்சின்' குறைவாக சுரந்தால், மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவது, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

6 'தைராய்டு' பிரச்னை உள்ளோர் தவிர்க்க வேண்டிய உணவுகள்?

'தைராய்டு' குறைவாக சுரக்கும் பிரச்னை இருந்தால், முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது.

7 'தைராய்டு' காரணத்தால்தான், கழுத்துப் பகுதி வீக்கமடைகிறதா?

'தைராய்டு' சுரப்பியின் செயல்பாடு முறையாக இல்லாதபோது, கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள 'தைராய்டு' சுரப்பி வீக்கமடைந்து, கழுத்தில் வீக்கத்தை உண்டாக்கும். சில நேரங்களில், அயோடின் குறைபாட்டாலும், கழுத்து வீக்கம் ஏற்படலாம்.

8 'தைராய்டு' பிரச்னை இருந்தால், மூட்டுகள் வலிக்குமா?

மூட்டு வலி மற்றும் கடுமையான உடல் வலி போன்றவை 'தைராய்டு' பிரச்னைக்கான அறிகுறிகள்தான்; அதோடு 'தைராய்டு' ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், அவை தசை பிடிப்புகளை ஏற்படுத்துவதோடு, உடலில் அங்கங்கே வலியையும் உண்டாக்கும். இத்தகைய வலி கடுமையாக இருக்கும்.

9 தைராய்டு சுரப்பியில் கட்டிகள் வருமாமே!

ஆம், தைராய்டு சுரப்பியில் முதலில் சிறு கட்டிகள் வர வாய்ப்புண்டு. அந்த கட்டிகள் நாளடைவில் புற்றுநோயாகவும் மாறலாம். இதுமட்டுமல்லாமல், தைராய்டு சுரப்பியில் நேரடியாக கூட புற்றுநோய் கட்டிகள் வரும்.

10 தைராய்டு குறைபாட்டை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா?

பொதுவாக, மக்களுக்கு வரக்கூடிய குறைபாடு தைராக்சின் குறைவாக சுரப்பது. இக்குறைபாடு

ஒரு முறை வந்துவிட்டால் தைராக்சின் மருந்துகளை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும். ஆனால், தைராக்சின் அதிகமாக சுரந்தால் மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் முற்றிலுமாக குணப்படுத்தலாம்.

- எஸ்.ஜாகிர் உசைன்,

நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us