தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடலில் கால்சியத்தை உருவாக்கும் உணவுகள்!

உடலில் கால்சியத்தை உருவாக்கும் உணவுகள்!

உடலில் கால்சியத்தை உருவாக்கும் உணவுகள்!


PUBLISHED ON : நவ 22, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடலுக்கு வேண்டிய சத்துக்களில், கால்சியம் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்னைகள் ஏற்படும். நிறைய பேர், மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர்.

உடலில் கால்சியம் சத்து மிகவும் குறைவாக இருப்பதே காரணம். கால்சியம் அடங்கிய உணவை மட்டும் சாப்பிட்டால், அனைத்தும் சரியாகி விடாது. ஏனெனில் கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு, வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியம். எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

பொதுவாக கால்சியம் குறைபாடானது, ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். மாதவிடாய் காரணமாக, பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். பிரசவத்தின் போதும் நிறைய கால்சியம் போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள், கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எந்த உணவுகளிலெல்லாம், கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்பதை பார்ப்போம்.

பால்: பாலில் கால்சியம் அதிகம் நிறைந்தது. அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

தயிர்: பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும், பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.



மத்தி மீன்:
மீன்களில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது. அத்தகைய மீன், 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.

சீஸ்: பால் பொருட்களில் ஒன்றான சீஸ், பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

உலர் அத்திப்பழம்: அத்திப்பத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும், 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.

பச்சை இலைக்காய்கறிகள்: பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

கடல் சிப்பி: பொதுவாக கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.

பாதாம்: பாதாமில் வைட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70- 80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.



இறால்
: இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே தீயை குறைவில் வைத்து, அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us