sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

பெண்களே செருப்பு வாங்கும்போது கவனம்!

/

பெண்களே செருப்பு வாங்கும்போது கவனம்!

பெண்களே செருப்பு வாங்கும்போது கவனம்!

பெண்களே செருப்பு வாங்கும்போது கவனம்!


PUBLISHED ON : நவ 22, 2015

Google News

PUBLISHED ON : நவ 22, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைஹீல்ஸ் செருப்புகள் பெண்களுக்கு, கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க, உயரமான குதிகால் செருப்புகளை அதிக விலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.

குதிகால் செருப்பணியும், 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுகின்றனர். குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம். இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு தெறிப்பது போல் 'நியுரோமா' எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.

குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது, குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை, நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க, டாக்டர்கள் சொல்லும் ஆலோசனை: உங்கள் கால் அளவை சரியாக தெரிந்துகொண்டு அதற்கு பொருத்தமான அதிக உயரமில்லாத, குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.

பகல் முழுவதும் நீங்கள் நடந்து, வேலை முடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க, காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது. நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய, 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்னை ஏற்படுத்தும்.

2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை; பாதுகாப்பானவை. குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் 'சோல்' ரப்பரால் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல், சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும். குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலுக்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும். குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம், முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும். அதிக நேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள்.

அழகை விட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். குதிகால் செருப்பு காலில் நன்றாக பொருந்தும் வண்ணம், வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது.






      Dinamalar
      Follow us