PUBLISHED ON : ஜூலை 27, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காளை, மதுரை: மூணாறில் வசிக்கும் எனக்கு, மழைக் காலத்தில் திடீரென காய்ச்சல், குளிர், அதிக மூச்சுத் திணறல் இருந்தது. டாக்டரோ இதை, 'ஹைபர்சென்சிட்டிவ் நியூமானிடிக்ஸ்' என்றார். வீட்டுச் சுவரில் வளரும் பூஞ்சையால், இது ஏற்பட்டு இருக்கலாம் என்றார். இது சாத்தியமா?
பலவித, 'அலர்ஜி' காரணிகள், இந்த நோயை உருவாக்கும். வீட்டு பூஞ்சைகள், 'அலர்ஜி'யை உண்டாக்கி, தும்மல் ஏற்பட்டு உடல் நிலையை பாதிக்கும். வீட்டை மாற்றலாம் அல்லது சுவரைச் சுத்தம் செய்யலாம். நோயின் வீரியத்தை பரிசோதித்து, அதற்கேற்ப, டாக்டர்கள் தரும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால், உபாதையைக் குறைக்கலாம்.

