
செய்முறை
1 விரிப்பில் நேராக நிற்க வேண்டும்
2 இரண்டு கைகளையும் உடம்பிற்கு பக்கவாட்டில், நேராக நீட்ட வேண்டும்
3 பார்வையை ஒரே இடத்தில் நிலைநிறுத்த வேண்டும்
4 பின் உடலையும், மனதையும் ஒருங்கிணைத்து, வலது காலை உயர்த்தி, இடது கணுக்காலை பின்னிக் கொள்ள வேண்டும்
5 அதன் பின், வலது கை மேலாக, இடது கை கீழாக பின்னிக் கொள்ள வேண்டும்
6 மெதுவாக மூச்சு இழுத்து விட வேண்டும்
7 சில வினாடிகள் கழித்து, கைகளை விலக்கி, பின் கால்களை விலக்கி, சாதாரண நிலைக்கு வர வேண்டும்
8 அடுத்து, கால்களை மாற்றி செய்ய வேண்டும்.
குறிப்பு
ஆசனம் முடியும் வரை பார்வையை திருப்பாமல், ஒரே இடத்தில் நிலைநிறுத்த வேண்டும். பலவீனமான மூட்டு மற்றும் மூட்டு வலி உடையோர், இந்த ஆசனத்தை, யோகா ஆசிரியரின் ஆலோசனையின்படி செய்ய வேண்டும்.
பலன்கள்
உடம்பையும், மனதையும் பலப்படுத்துகிறது
மூட்டுவாதம், விரைவீக்கம் போன்றவற்றுக்கு, நல்ல பலனை கொடுக்கிறது
ஞாபக சக்திக்கு நல்ல ஆசனம் நரம்பு மண்டலம் பலப்படும்அதிகப்படியான தொடை சதை குறையும்
- ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 97909 11053

