sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/சளியை என்ன சேதி என கேட்கும் இஞ்சி

சளியை என்ன சேதி என கேட்கும் இஞ்சி

சளியை என்ன சேதி என கேட்கும் இஞ்சி


PUBLISHED ON : செப் 27, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2015


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் ஜீரணிக்க வைக்கும்; பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரை பெருக்கிப் பசியைத் தூண்டும். உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.

இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது, பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன், ஆகார குற்றங்கள் உண்டாவதையும் தடுத்து, உணவு எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை.

இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும். ஆஸ்துமா இருமலுக்கு இஞ்சி, 15 கிராம், வெள்ளெருக்கன்பூ 5, மிளகு, 10; இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி, ஒரு குவளையாக சுண்ட வைத்து, வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்து வர வேண்டும். இருமலுக்கும், நுரையீரலை சளி அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்த கஷாயத்தை காலை, மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம்.

இஞ்சி கஷாயம் கால் டம்ளர், 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து, அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து, அரைக்கால்படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் பித்த ரோகங்கள், வாயு, கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.

அத்துடன் நீரிழிவு, சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்.

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள், ரத்தக் குழாய்களில் நேரிடும் ரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பை தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us