தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/மறக்காமல் இருக்க மூளைக்கு வேலை கொடுக்கணும்

மறக்காமல் இருக்க மூளைக்கு வேலை கொடுக்கணும்

மறக்காமல் இருக்க மூளைக்கு வேலை கொடுக்கணும்


PUBLISHED ON : நவ 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக செல்லாத நிலையில் வருவது, 'பிரைன் அட்டாக்' எனப்படும், 'ஸ்ட்ரோக்' அல்லது பக்கவாதம். இதில், இரு வகைகள் உள்ளன. ரத்த அடைப்பு ஏற்பட்டால் வருவது, 'இஸ்கீமிக் ஸ்ட்ரோக்!' மூளைக்குள் ரத்த குழாய் வெடித்து ரத்த கசிவு ஏற்படுவதால் வருவது, 'ஹேமரேஜ் ஸ்ட்ரோக்!'

உயர் ரத்த அழுத்தம், கட்டுப்படுத்தாத சர்க்கரை அளவு, அதிக கொழுப்பு, சிகரெட், மது பழக்கம், உடல் பருமன், மன அழுத்தம் என்று மாரடைப்பிற்கும், பக்கவாதத்திற்கும் காரணிகள் பொதுவானவை. ஒன்றுக்கு அதிகமான காரணிகள் சேரும் போது, பக்கவாதம் வரும் அபாயம் அதிகரிக்கிறது.

மற்ற உறுப்புகளில் பாதிப்பு வந்தால், சிகிச்சைக்கு பின், செயலிழந்த திசுக்களை தானே சரி செய்து கொள்ளும் தன்மை உண்டு. ஆனால், ஐந்து நிமிடங்கள் மூளைக்கு ரத்த ஓட்டம் இல்லாமல் போனாலே, மூளையில் உள்ள நரம்பு செல்கள் செயலிழந்து விடும். குறிப்பிட்ட நேரத்திற்குள் ரத்த ஓட்டம் சீராகவில்லை என்றால், நிரந்தர செயலிழப்பு அபாயம் உள்ளது. பாதிப்பு ஏற்பட்ட நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவ உதவி பெற்றால், ஊசி வாயிலாக மருந்து செலுத்தி, ரத்த உறைவை கரைக்கலாம்; நிரந்தர ஊனத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது.

பக்கவாதம் என்பதால், ஒரு பக்க கால், கை, முகம் செயலிழக்கும். சிலருக்கு கை, கால் மொத்தமாக செயலிழந்து விடும். சிலருக்கு குறிப்பிட்ட அளவு தான் வரும்; உழைக்கும் திறன் பாதிக்கப்பட்டு, வருமானத்தை இழக்கும் நிலை ஏற்படலாம்.

பேச்சு வராமல் போகலாம்; குழறலாம். அடிக்கடி தடுமாற்றம் வரலாம். ஒரு பக்கம் பார்வை மறையலாம். இதன்பின், பிசியோதெரபி, மருத்துவ சிகிச்சை என்று தொடர்ந்து செய்தாலும், எந்த அளவு முன்னேற்றம் தெரியுமோ, அந்த அளவு தான் இருக்கும். பழைய நிலை வராது. வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான மாற்றங்களை பின்பற்றுவது மட்டுமே இதை தவிர்க்க சிறந்த வழி.

மூளையை வலிமையாக்க...

தினமும் செய்கிற இயந்திரத்தனமான வேலைகளுக்கு நடுவில், நமக்கு பிடித்தமான விஷயங்களையும் செய்ய வேண்டும். குழந்தை பருவத்தில் இருந்தே பிடித்த விஷயங்கள் பல இருக்கும். புத்தகம் படிப்பது, இசை கேட்பது, மொழி கற்பது, ஓவியம் வரைவது, புதிர் போடுவது இப்படி. நேரம் கிடைக்கும் போது இவற்றையும் செய்யலாம்.

அறிவு, சிந்திக்கும் திறனை மேம்படுத்த, நம்மை சுற்றியுள்ள புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்க வேண்டும்; நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மூளைக்கு பயிற்சி, வேலை கொடுப்பதை நிறுத்தக்கூடாது.

எதுவும் செய்யாமல், செய்ததையே செய்தால், மூளையின் நரம்பு செல்கள் சிதையும்; புதிய செல்கள் உருவாகாது; மறதியை உண்டாக்கும். புதிது புதிதாக தெரிந்து கொள்வதில் மட்டுமே மூளையின் திறன் அதிகமாகும். இது தான் மூளைக்கு தரும்

சிறந்த பயிற்சி.

டாக்டர் எஸ். பாலசுப்ரமணியன், பேராசிரியர், நரம்பியல் துறை, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us