sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/பனிக்கால முகவாதம்

பனிக்கால முகவாதம்

பனிக்கால முகவாதம்


PUBLISHED ON : ஆக 06, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2017


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வாய் திடீரென கோணல் ஆகிவிடும். கண்களை சரியாக மூட முடியாத நிலை ஏற்படும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டாலே முகவாதம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அதிகாலை பனியில், வெளியில் செல்வோர் பலரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். காது வழியாக ஊடுருவும் பனி, உள்ளே சென்று முகத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்தம் தடைபட்டு முகத்தின் ஒரு பகுதி மட்டும் இழுத்துக்கொள்கிறது. இந்நோய் குளிர்காலத்தில் மனிதர்களைத் தாக்கும் சீசன் நோய்.

நகர்புறங்களில் பனியில் வேலைக்கு சென்று திரும்புவோரையும், கிராமங்களில் மலையடிவார மக்களையும் தாக்குகிறது. ஆண்களை விட பெண்களையே இந்நோய் அதிகளவில் தாக்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. பனியில், பஸ், ரயில் போன்றவைகளில் பயணம் செய்யும் போது பனிக்காற்று காதில்

ஊடுருவாத வகையில், 'மப்ளர்' கட்டிச் செல்வது அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள சிறு குழந்தைகளுக்கு கூட முகவாதம் வரும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல் பலவீனமடையும் காலங்களில் முகவாதம் எளிதில் தாக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் கண்களை மூட இயலாமல் போகும். உணவு சாப்பிடும்போதோ, திரவ ஆகாரம் சாப்பிடும்போதோ, அனைத்தும் வெளியே கொட்டிவிடும்.

எனவே சரியான முறையில் சிகிச்சை பெற்றால் பூரணமாக குணமடைந்துவிடலாம். முகவாதம் வந்தவர்கள் குளிர்ச்சியான உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீம், பிரிட்ஜில் வைத்த உணவு பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தயிர் உள்ளிட்ட புளிப்பான உணவு பொருட்கள், மஞ்சள் பூசணிக்காய் உண்ணக்கூடாது. கீரை போன்ற இலை காய்கறிகளை உட்கொள்வது ஆரோக்கியமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us